பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே முனிவிலர் துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழ் எனின் உயிருங்கொடுக்கு யெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர் அன்னமாட்சி அனையராகித் தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே (புறம்.182) 85 "இந்திரனின் அமிழ்தமே கிடைப்பதாயினும் அது தன் உயிரை வளர்க்கும் என்று கருதித் தாமே தனித்து உண்ணமாட்டார்; சினங்கொள்ளார்; பிறர் அஞ்சுவது தாமும் அஞ்சுவர்; வேலையின்றிச் சோம்பியிருக்க மாட்டார்; புகழ் எனின் உயிரையும் தியாகம் செய்வர்; அயர்வு அறியாதவர்; பழிவரும் எனின் உலகம் முழுவதும் பரிசாகக் கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார். அத்தகைய மாட்சிமைப் பட்டவராக வாழ்பவர் உயர்ந்தவர். அவர் தமக்கு என எதுவும் செய்து கொள்ளாமல் பிறருக்கு என உழைக்கும் உண்மையான இயல்பும் உடையவராதலே அவர் தகுதிக்குக் காரணமாகும். இத்தகைய உயர்ந்த பெருமக்கள் காரணமாக இந்த உலகம் வாழ்ந்து வருகிறது" என்பது இப்பாடலின் கருத்து. வழங்கி வாழும் பண்பு, வாழ்வித்து உயரும் பாங்கு மனிதனிடத்து மட்டுமல்லாது மற்ற உயிர்களிடத்தும் விளங்குவதை அறிவது நலம் பயக்கும். தாவர உலகில் வாழையும் தென்னையும். தாம் ஏற்பதை விட அதிகமாகத் தந்து பயன்படுகின்றன. எந்த மரமும் தனக்கென்று எதையும் விளைவிப்பதில்லை. மாங்கனியை மனித குலம்தான் உண்கிறது. மாமரம் உண்பதில்லை. நெல்லும் கரும்பும் மனிதனை வளமாக்குபவை அல்லவா? ஆகையால் அவற்றின் வாழ்வு வேள்வியாகிறது. பசுதான் உண்பதையெல்லாம் மக்களுக்குப் பயன்படும் பொருள்களாக மாற்றித் தருகிறது. அதன் வாழ்வு வேள்விமயமானது. எனவே பசு தெய்வமாகக் கொண்டாடப்படுகிறது. மக்களுக்குள் உயர்ந்தோர் மேலோர். அவர்கள் மண்ணுயிர் நலனுக்கு என்றே வாழ்கின்றனர். வடலூர் வள்ளல், புத்தர் பிரான், இயேசுநாதர், நபிகள் நாயகம் போன்றவர்கள் மண்ணுலகில் வாழ்ந்த