பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 அப்படியே ஏனை உயிர்மெய் யெழுத்துக்களையும் சொல்லத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், 131 வடிவெழுத்துக் களையும் கற்றுக்கொள்வதற்கு இளங்குழந்தைகளுக்குப் பல மாதங்கள் ஆகின்றன; எழுதத் தெரிந்துகொள்ளவும் நாளா கிறது.அச்சகத்திலுள்ள தமிழ்எழுத்துப்பெட்டியில் அறை கள் மிகுதியாக உள்ளமையால் அச்சுக்கோத்துப் பழகவும் நாளாகிறது. அச்செழுத்துக்கள் வார்ப்பதும் கடுமையாக உள்ளது. வடிவெழுத்து மிகுதியால், தமிழ்க் கையச்சுப் பொறி, அல்லது தட்டெழுத்துப் பொறி (டைப் ரைட்டிங் மிஷின்) செய்யக் கடுமையாக இருப்பதோடு, விலை மிகுதியும், அச்சடித்துப் பழகக் காலமும் ஆகின்றன; அச்சடிப்பதும் எளிதாக இல்லை. அதனால், அரசியல் அலுவலகங்கள், தொழிலகங்கள், வணிகமனை முதலிய வற்றில் தமிழ்மொழி தன்னிறைவு பெறாமல் இருந்து வருகிறது. ஆகையால், இவ்வெண்ணிக்கையிலிருந்து இயன்ற வரையிலும் ஏற்றவாறு தமிழ் வடிவெழுத்துக் களைக் குறைப்பதே யாவற்றிற்கும் எளிதும் ஏற்றதும் ஆவதோடு, நம் தாய்மொழியாந் தமிழ்மொழி சிறப்படை வதற்கும், வளமும் வளர்ச்சியும் பெறுவதற்கும் ஏது வாகும். இன்று தமிழகத்தே தனித்தமி ழாட்சி நடந்து வருகிறது.தமிழ் ஆட்சிமொழியாகவும் பாடமொழியாகவும் ஆகியுள்ளது. பழையபடி தமிழன்னை அரியணையி லமர்ந் துள்ளனள். இந்நிலையில் இவ்வெழுத்துச் சீர்திருத்தம் மிக மிக இன்றியமையாத தொன்றாகு மென்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இணையெழுத்து உயிரெழுத்துப் பன்னிரண்டனுள், 'ஐ, ஔ' என்பன தனியெழுத்துக்களல்ல; இணையெழுத்துக்கள் ஆகும்.