பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பழங்காலத்தில் இவை இணையெழுத்துக்க ளாகவேதாம் எழுதப்பட்டு வந்தன. பிற்காலத்தினரே தனியெழுத்துக்க ளாக்கிவிட்டனர். இவற்றைத் "அகரம் இகரம் ஐகாரம் ஆகும்." (தொல். எழுத்து-54) 66 அகரம் உகரம் ஒளகாரம் ஆகும்." (தொல். எழுத்து-55) அதாவது, அகர வொலியும் இகர வொலியும் சேர்ந்து ஐகார வொலியாகும். அகர வொலியும் உகர வொலியும் சேர்ந்து ஒளகார வொலியாகும் என்பதாம். காட்டு: ஐ-அஇ ; ஐந்து-அஇந்து. ஒள- அஉ; ஒளவை - அஉவை இவ்வாறு எழுதினால், குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின் தொடர்மொழி யெல்லாம் நெட்டெழுத் தியல.' (தொல். எழுத்து-50) என்றபடி, ஒரு மாத்திரையுள்ள இரு குறில்கள் இணைந்து ஒரு நெடில் ஆவதேனும், விட்டிசைக்கின் அது ஈரெழுத்தெனவே படும். அவ்விரண்டின் (அஇ, ஒலியே அது என்பதன்றி, இவ்வாறு எழுத வேண்டும் என்பதன்று. உரையாசிரியரே, 'இது கொள்ளற்க' என்றனர். பின் எவ்விரண்டெழுத்து வடி வங்களை இணைத்து எழுதவேண்டுமெனில், அஉ) 66 அகரத் திம்பர் யவகரப் புள்ளியும் ஐஒள நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்." (தொல். எழுத்து-56)