பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 அதாவது, அகரத்தின் பின்னர் யகரவொற்றெழுதின் 'ஐ' என்னும் நெட்டெழுத்தாம்; அகரத்தின் பின்னர் வகரவொற் றெழுதின் 'ஔ' என்னும் நெட்டெழுத்தாம்; அவை வடிவமையத் தோன்றும் என்பதாம். 'மெய்பெறத் தோன்றும்' என்றதனால், இவையே ஒலிவடிவும் வரிவடிவும் ஆம் என்பதாம். முன்னிரு சூத்திரங்களும் (54,55) ஒலி வடிவையும், இச்சூத்திரம் ஒலி வடிவோடு வரி வடிவையும் குறிப்பனவாகும். காட்டு: ஐ-அய். ஒள-அவ். ஐயம்-அய்யம் ஒளவை-அவ்வய் வைகல்-வய்கல் தகைமை-தகய்மய் வௌவால்-வவ்வால் மௌவல்-மவ்வல் பையன், வௌவால்' என்பதைவிட, 'பய்யன், வவ்வால்' என்பதைச் சிறுவர்கள் எளிதில் தெரிந்து கொள்வரல்லரோ ? இவையிரண்டும் இனக்குறிலின்றி, இகர உகரங்களை இனமாகக் கொள்வதனாலும், 'ஐஒள நெடுஞ்சினை' என்றதனாலும், இவை தனியுயிர்களல்ல வென்பது வெளிப்படை. 'செ + ய் = செய்' என எழுத்துக் கூட்டுவது போலவே, 'க+ய்=கய்' என எழுத்துக் கூட்டுவதும் இயல்பாகவே அமைதல் காண்க. விடுதலையில் 'அய்' எனவே பயின்று வருகிறது. “அவ்விய நெஞ்சத்தான்” (குறள்-169) (கம்பரா. மந்தரை சூழ்ச்-88) "கவ்வை கூர்தரச் சனகியாங் கடிகமழ் கமலத் தவ்வை"