உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவிய கௌவை 14 • அவ்விய - கவ்வை தவ்வை தௌவை - என, இலக்கியத்திலும் பயிலுதல் காண்க. அளபெடை: 'மெய்ய் பேசுதல், செவ்வ் வாம்பல்' என, 'மெய்ய், செவ்வ்' என்பன, நேர் நேர்-தேமா ஆதல் போல, 'தய்ய் நிலவு, வவ்வ் வால்போல்' என, தய்ய், வவ்வ்' என்பனவும், நேர்நேர் - தேமா ஆகலான், இவை ஒற்றளபெடையாகக் கொள்ளப்படும். புணர்ச்சி: இனிப் புணர்ச்சியிலும் இவை, 'எளிமய் யானது, அய்யுறவு, தய்த்திங்கள், வய்நுனி, கய்யானை, எனவும், 'கவ்வொன்று, வவ்யானை' எனவும், யகரவகர ஈற்றுப் புணர்ச்சி விதிகளே பெறுதல் காண்க. எனவே, 'ஐ,ஔ' என்னும் இவ்விரண்டுயிர்களை யும், 'அய், அவ்' எனப் பழைய வடிவாகவே கொள்ளலாம். உயிர்மெய் யெழுத்துக்கள் உயிர்க்குறி: 'எழுத்து மிகுதி' என்பதற்கு உயிர்மெய் யெழுத்துக்களே காரணமாகும். பண்டைக் காலத்தே அகர வுயிர்மெய் யொழிந்த எல்லா உயிர்மெய் யெழுத்துக் களும் தனியாக உயிர்க்குறியைப் பெற்றே இருந்தன. கூட்டி எழுதி வந்ததால் நாளடைவில் சில உயிர்மெய் யெழுத்துக்கள் தனித்த உயிர்க்குறிகளை இழந்து ஒன்றா யின; ஒன்றாக எழுதப்பட்டன; சில உயிர்க்குறிகள் திரிபடைந்தன. ஐகாரக் குறியோடு()ை கூடும் னகர