உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 முதலிய நான்கு மெய்யும் ஒரே சுழிவடிவில் அமைவ தால், னை, ணை, லை, ளை' என மேல்வளைவு கொடுத்து ஒன்றாக எழுதலாயினர். பிறவும் இவ்வாறே சேர்த் தெழுதப்பட்டன. தொல்காப்பியர் காலத்தில் (கி. மு. 1000க்கு முன்) உயிர்க் குறிகள் தனியாகவே எழுதப்பட்டு வந்தன என்பது, கீழ்வரும் தொல்காப்பியச் சூத்திரத்தாலும், அதன் பழைய உரையாலும் பெறப்படுகிறது. "புள்ளி இல்லா எல்லா மெய்யும் உருவுரு வாகி அகரமோ டுயிர்த்தலும், ஏனை யுயிரோ டுருவுதிரிந் துயிர்த்தலும் ஆயீ ரியல உயிர்த்த லாறே.' (தொல். எழுத்து-17) எல்லா மெய்யும் புள்ளி இல்லா(க) (உயி ரோடு கூடும் போது) எல்லா மெய்யெழுத்துக்களும் புள்ளி இல்லாதனவாக, உருவு உருவு ஆகி அகரமோடு உயிர்த் தலும் - அதனதன் முன்னை வடிவே வடிவாகி அகர வுயிரோடு கூடி ஒலித்தலும், ஏனை உயிரோடு உருவு திரிந்து உயிர்த்தலும் - அகர மொழிந்த ஏனைப் பதினோ ருயிர்களோடு கூடிய வழி உருவு வேறுபட்டு ஒலித் தலுமாக, அ ஈர் இயல-அவ்விருவகை இயல்பினை யுடைய, உயிர்த்தல் ஆறு-அவ்வுயிர்மெய் யெழுத்துக்கள் ஒலிக் கும் முறைமை என்பதாம். அதாவது, புள்ளி நீங்கின வடிவே அகரவுயிர்மெய் யின் வடிவமாகும். மற்றைப் பதினோ ருயிர்மெய்களின் வடிவும் வேறுபட்ட வடிவாகும் என்பதாம். உயிர்த்தல்- வடிவமைந் தொலித்தல்; அவ்வடிவுடன் அம்மெய்யு முயிருமாக ஒலித்தல்.