பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 17 அதன் பின்னர், முன் இரட்டைப் புள்ளி(..க)"கை இவ்வாறு ஆக்கப்பட்டது. இவ்வைகாரக் குறியோடு ()ை வேறுபாடு தெரிய, பின்இரட்டைப் புள்ளியான ஒளகாரக் குறிக்கு ளகரத்தைக் (கெ..கௌ)கொண் டனர். கி.பி.1700 இல் தமிழகம் போந்த இத்தாலி நாட்டினரான வீரமாமுனிவர் என்பார், ஒருசுழிக் கொம்பை ()ெ இருசுழிக் கொம்பாக்கி ()ே அதை நெடிலுக்கும், ஒருசுழிக் கொம்பைக் குறிலுக்கும் கொண்டனர். (கொடுந்தமிழ்-வீரமாமுனிவர்). மிகப் பழங்காலத்தே உயிர்க் குறிகள் இவ்வாறு விலங்கும் கோடும் புள்ளியுமாக இருந்தே, நாளடைவில் காலும், ஒருசுழி இருசுழிக் கொம்பும், மேல் கீழ் வளைவும் ஆயின; அவ்வாறு திரித்து ஆக்கப்பட்டன. பின்னர்ச் சில குறிகள் மெய்யெழுத்துடன் ஒன்றாக இணைத்து எழுதப்பட்டு இன்றைய நிலையை அடைந்தன. பழையபடியே எல்லா உயிர்மெய் யெழுத்துக்களுக் கும் தனி யுயிர்க் குறிகளைக் கொள்ளுதல், சுருக்கத்திற்கு ஏற்ற வழியாகும். எழுத்துச் உயிர்வேறு உயிர்க்குறி வேறு வடிவாக இராமல் ஆங்கில முறைபோல், உயிரெழுத்தையே உயிர்மெய்க் குறியாகக் கொள்ளுதல் மேலும் எழுத்துச் சுருக்கத்திற்கு ஒரு வழியாகும். அவ்வாறு கொள்வதற்கு இன்றுள்ள உயிர் வடிவங்கள் ஏற்றவையாக இல்லை. எனவே, ஏற்ற வாறு புதிதாக உயிர் வடிவங்களை ஆக்கியுள்ளனன். புதிதாக ஆக்கப்பட்டுள்ள இவ்வுயிர் வடிவங்கள், குறி லினின்று நெடிலை எளிதில் தெரிந்து கொள்ளவும், விரைவாகவும் எளிதாகவும் எழுதவும், ஒன்றோடொன்றன் வடிவம் மயங்காமல் இருக்கவும் ஆனமுறையில் ஆக்கப் பட்டுள்ளன. மேலும் இவை, ஒரு மெய்க்கு ஒரே குறி என்னும் முறையில் அமைந்துள்ளன.