பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 புதிய உயிரெழுத்து க்கள் பழைய வடிவம் அ ஆ ஈ உ ஊ எ ஏ ஓ ஓ புதிய அ அர 9 வ ஐ 6 ே வடிவம் ஓ இப்பத்தும் உயிரெழுத்தாகவும், அகரம் அல்லாத ஒன்பதும் உயிர்மெய் யெழுத்தின் உயிர்க் குறியாகவும் பயன்படுவனவாகும். இகர முதலிய எட்டும் மொழி முதலில் தனியுயிராகவும், ஏனையிடங்களில் உயிர்மெய் யின் உயிர்க்குறியாகவும் வருதற்கேற்றவாறு அமைக்கப் பட்டுள்ளன. இன்று உயிர்க் குறிகளுட் சில மெய்யெழுத்தின் முன்னும், சிலபின்னும் எழுதப்படுகின்றன. இம் முறை உயிர்மெய்யெழுத்தின் ஒலி முறைக்கு ஏற்றதாக இல்லை. எனவே, இம்முறையை மாற்றி, "மெய்யின் வழியது உயிர்தோன்று நிலையே.' உயிர் - உயிரானது, (தொல். எழுத்து-18) தோன்றும் நிலை-உயிர்மெய் யெழுத்தில் ஒலிக்கும் இடம், மெய்யின் வழியது- மெய் யெழுத்திற்குப் பின்னாம். அதாவது, உயிர்மெய் யெழுத்தில் ஒற்றொலி முன்னும் உயிரொலி பின்னுமாக ஒலிக்கும். தோன்றும் நிலை' என்றதனால், உயிர்மெய் யெழுத்தை உயிரும் மெய்யுமாகப் பிரிக்குமிடத்தும் கூட்டுமிடத்தும் மெய் முன்னும் உயிர் பின்னுமாகவே கொள்ளவேண்டும் என்ப தாம். உயிர்மெய்யெழுத்தில் ஒற்றொலி முன்னும் உயிரொலி பின்னுமாக அமைந்துள்ளபடியே எல்லா உயிர்க் குறிகளை