உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

89






மகிழ்ச்சி

சிறப்பு

"இதோ, என் அப்பனுக்குத் தங்க வளையல்" (பெண்பாலுக்கு ஆண்பால்)

"தாய்க்குத் தாயாகிய இறைவன்" (ஆண்பாலுக்குப் பெண்பால்)

இடவழுமைதி


தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடத்திற்குரிய சொற்கள் இடம் மாறி அமைந்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அஃது இடவழுவமைதி ஆகிறது. சூழல் காரணமாக இடவழுவை ஏற்றுக் கொள்வது, இடவழுவமைதி ஆகும்.

"வீரனின் தாய் அழுவேனா?"

இத்தொடரில், வீரனின் தாய் என்ற படர்க்கைப் பெயர், தன்மை எழுவாய்ப் பொருளில் வந்து இடவழுவமைதி ஆயிற்று.

"ஐயாவுக்கு எப்போதுமே வெற்றிதான்"

ஐயாவுக்கு எப்போதுமே போட்டியில் வெற்றிதான் (வழுவமைதி) (ஒருவன் தன்னைத் தானே படர்க்கை இடத்தில் வைத்துக் கூறுவதால்)

கால வழுவமைதி

முக்காலத்தினுள் ஒன்று மற்றொன்றாக மயங்கி வந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படுமாயின் அது கால வழுவமைதி ஆகும். விரைவு, மிகுதி, தெளிவு, இயல்பு ஆகிய காரணங்களால் முக்காலம் ஒன்று மற்றொன்றாக மயங்கிவரும்.

ஒருவர் தன்னை அழைக்கும்போது, தயாராக இல்லையாயினும் உடனே விடையளிக்கும் பொருட்டு, "இதோ வந்துவிட்டேன்" என்று கூறுவது காலவழுவமைதி ஆகும். இத்தொடரில், எதிர்கால நிகழ்வை இறந்த காலத்தில் சொல்வதாகும். இத்தொடர், விரைவு காரணமாக எழுந்தது. மரபு வழுவமைதி

காலம் காலமாகப் பின்பற்றப்படும் மரபு மீறப்பட்டாலும் அஃது ஏற்றுக்கொள்ளப்படுமாயின் மரபு வழுவமைதியாக ஆகும்.

ஒருவன் தான் வரைந்த ஓவியத்தைக்காட்டி,"இந்த ஓவியம் நான் வரைந்தது" என்று கூறுகிறான். இத்தொடரில் மரபு வழு உள்ளது. இருப்பினும், மரபு வழுவமைதியாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.