பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

103 பெயர் நிலைக்கச் செய்யப்பெற்றது. ஐப்பசித் திங்களில் காவிரி நீராடுதல் இங்கு மிகவும் சிறப்பான விழாவாகக் கொண்டாடப் பெறுகிறது. திருப்பனந்தாள். பனை மரத்தைக் கோயில் மர மாகக் கொண்ட சைவத் திருப்பதி இது. இங்கே திருப்பனந்தாள் காசி மடம் என்னும் நிறுவனத்தைக் குமரகுருபரர் அமைத்தார். இதற்குக் காசியிலும் கிளை மடம் உண்டு. பனந்தாளில் கல்லூரி உண்டு. - திருவாவடுதுறை: இது காவிரியின் தென்கரையில் உள்ள ஒரு சைவத் திருப்பதி. திருவாவடுதுறை ஆதீனம் என்னும் பெரிய சைவ நிறுவனம் ஈண்டுள்ளது. திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்பவரின் வளர்ச்சி இந்நிறுவனத்தால் உண்டானது தான். திரு மூலரின் அடக்கமும் (சமாதியும்) இந்தப் பகுதியில்தான் என்று சொல்லப்படுகிறது. தருமபுரம்: திருமயிலாடுதுறையை அடுத்துள்ள இவ்வூரில் தருமபுரம் ஆதீனம் என்னும் சைவ நிறுவனம் உள்ளது. பல ஊர்த் திருக்கோயில்கள் இதன் மேலாட்சியில் உள்ளன. சைவத் திருமடங்களுள் இது மிகவும் பெரியதாகும். கல்லூரி உண்டு, திருவாரூர் : சோழ நாட்டின் சிறந்த சைவத் திருப்பதிகளுள் இஃதும் ஒன்று. திருவாரூர் தேர் அழகு பெயர் பெற்றிருந்தது. சோழர்களின் தலைநகர்களில் இதுவும் ஒன்றாயிருந்தது. இறந்த கன்றுக்காக மனுநீதி சோழன் தன் மகனைத் தேர்க்காலில் அகப்படச் செய்த தாகக் கூறப்படும் வரலாறு நடந்த இடம் இந்த ஊர் தான். இசையறிஞர் மூவரின் பிறப்பிடமும் இதுவே,