பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

105 பெருமை பெற்றிருந்தது. இப்போது இது இல்லை, சங்க காலத்தை அடுத்த கால அளவிலேயே இது கடலில் மூழ்கடிக்கப்பட்டது. பண்டு இந்நகரில் நடைபெற்ற விழாக்களும் வணிகமும் மிகவும் சிறப்புற்றிருந்தன. சீர்காழி - தஞ்சை மாவட்டத்துள் ஒரு வட்டத் தின் பெயராக உள்ளது சீர்காழி. சிறந்த சைவத் திருப்பதி இது. தேவார ஆசிரியர்கள் மூவருள் ஒருவ ராகிய திருஞான சம்பந்தர் பிறந்த இடம் என்ற பெருமை இதற்கு உண்டு. தேவி கோட்டை :- இது, தென்னார்க்காடு மாவட் டத்தின் தென் பகுதியில் கடற்கரை ஓரமாக உள்ள ஊர். காவிரியின் பெரிய வடகிளையாறாகிய கொள்ளிடம் இவ்வூருக்கு அருகில் கடலில் கலக்கிறது. சிதம்பரம் :- சோழநாட்டைச் சேர்ந்த சிதம்பரம் நகரம் தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ளது, இப்பெயரால் உள்ள வட்டத்தின் தலைநகரமுமாகும் இது. காவிரியின் கிளை ஆறுகளுள் ஒன்றான வடவாற் றின் நீர் பாயும் வீராணம் என்னும் பெரிய ஏரி இந் நகருக்கு அண்மையில் உள்ளது. காவிரியின் முதல் பெரிய கிள்ை ஆறாகிய கொள்ளிடம் இந்நகர்ப் பகுதி யின் தென் கிழக்கில் ஒடுகிறது. இதற்குத் தில்லை என்ற வேறு-பழைய-பெயரும் உண்டு. நடராசரும் கோவிந்த ராசரும் எழுந்தருளியுள்ள இவ்வூர்க் கோவில் மிகவும் புகழ் வாய்ந்தது. இதற்கு அண்மையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் என்னும் பெரிய கல்வி நிறுவனம் உள்ளது. தேவாரத் திருப்பதிகள் காவிரிக் கரையிலும் அதன் கிளைகளிலும் உள்ள ஊர்கட்குச் சிறப்பு உண்டு. அந்த ஊர்களுள், நாயன்