பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

|{} களின் நிலை என்னாவது? இவர் படிக்கட்டில் நின்று பயணம் செய்ய வேண்டியதுதான். இப்போது தமிழக மும் படிக்கட்டில் நின்று பயணம் செய்யவேண்டிய நிலையில்தான் உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு கரிகாலன் காவிரியின் இருமருங்கும் கரை கட்டியது எதற்காக? மேற்கிலிருந்து வந்த வெள்ளம் தமிழ்நாட்டை அழித்த தனால்தானே கரிகாலன் கரை கட்டினான். காவிரி வெள்ளத்தைத் தமிழ்நாட்டுக்கு வாராமல் அன்றே தடுத்து மேற்கே அணை கட்டியிருந்தால் மேற்குப் பகுதி என்னாகியிருக்கும் தெரியுமா? இத்தனை ஆண்டுகளாகச் சுமை தாங்கியாயிருந்து வந்த தமிழகம், அந்தப் பழைய உரிமையில், வழக்கம்போல் நீர்விட வேண்டுகிறது. காவிரியோடு தமிழர்க்கு உள்ள மிக்க உரிமையை இரண்டாயிரம் ஆண்டு காலமாகத் தமிழ் நூல்கள் விளக்குவதை அறிவிப்பதே இந்த நூலாகும். இந்த நூலைக் கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழி களில் பெயர்த்து நம் நாட்டினர்க்கு நிலைமையை விளக்கி அறிவிக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/12&oldid=1018886" இலிருந்து மீள்விக்கப்பட்டது