பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

- 2. உலக ஆறுகளுள் காவிரி ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்' என்பது ஒளவை யின் நல்வழி மொழி. ஆற்றங்கரைப் பகுதிகளிலேயே, நெல், கரும்பு. போன்ற உயர் பொருள்கள் விளையும் நன் செய் வயல்கள் மிகவும் இருக்கும். இந்த வயல் சார்ந்த பகுதிக்கு மருத நிலம் என்று பெயராம். பிறவிடத்து மக்களைக் காட்டிலும் ஆற்றங்கரை மக்கவே வாழ்க்கை வசதியிலும் கல்வி-கலைத்துறையிலும் நாகரிகத்திலும் மேம்பட்டிருந்தனர் என்பது வரலாறு கூறும் உண்மை. பெரிய நகரங்கள் பல உலகில் ஆற்றங்கரைகளில் அமைந் திருப்பது காணலாம். ஒன்றிய அமெரிக்கப் (U S.A. பேரரசின் தலைநகரா யிருந்ததும் முதல் பெரிய நகரமாயிருப்பது மாகிய நியூயார்க் பாசேயிக் Passaic) என்னும் ஆற்றின் கரை யில் இருக்கிறது. பிரிட்டிசுப் பேரரசின் முதல் பெரிய நகரமாயும் தலைநகரமாயும் இருக்கும் இலண்டன் தேம்சு hames) என்னும் ஆற்றின் கரையில் ள்ளது. பிரிட்டிசு இந்தியாவின் முதல் தலை நகரா யிருந்ததும் இப்போது இந்திய அரசின் முதல் பெரிய நகரமாயிருப்பது மாகிய கல்கத்தா நகரம் ஃ ஊக்ளி (Hooghly) என்னும் ஆற்றின் கரையில் அமைந் திருக்கிறது. மற்றும், பலநாடுகளின் பெரிய நகரங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/13&oldid=1018888" இலிருந்து மீள்விக்கப்பட்டது