பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

}2 பல, ஆற்றங்கரைகளில் அமைந்திருப்பது ஈண்டு எண்ணத்தக்கது. இவ்வாறே, சோழ மன்னர்களிள் தலைநகரங்களாய் விளங்கிய உறையூரும், புகார் என்னும் காவிரிப் பூம் பட்டினமும் காவிரிக் கரையில் அமைந்துள்ளமை ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. ஒன்றிய அமெரிக்காவில் ஒடும் மிசி சிப்பி என்னும் ஆறு 6784 கி.மீ. நீளம் உள்ளது. தென்னிந்தியாவில் ஒடும் காவிரி ஆறோ 768 கி.மீ. நீளமே உடையது. இதற்குக் காரணம் என்ன? மிசி சிப்பி ஆறு அமெரிக்காவின் வடமேற்கில் ராக்கி மலைப் பகுதியிலிருந்து தோன்றி, தென்கிழக்கில் மெக்சிகோ வளைகுடாவில் வந்து கலக்கிறது. அது தோன்றும் இடத்திற்கும் முடியும் இடத்திற்கும் இடையே உள்ள பகுதி மிகவும் நீளமானது. அந்த இடைப் பகுதியில் ஒன்றிய அமெரிக்காவின் பல நாடுகள் உள்ளன. எனவே, அந்த ஆற்றின் நீளம் மிகுதியா யுள்ளது - - - காவிரி ஆறோ, தமிழ்நாட்டின் மேற்கே உள்ள குடகு மலைப் பகுதியில் தோன்றி தமிழ்நாட்டுக் காவிரிப் பூம்பட்டினத்திற்கு வந்து வங்கக் கடலில் கலக் கிறது. காவிரி தோன்றும் இடத்திற்கும் முடியும் இடத் திற்கும் இடையே உள்ள தொலைவு குறைவு. இந்தியா வின் நிலப்பகுதி தெற்கே வரவரக்குறுகுகிறது. தென்னிந் தியாவில் மிகவும் குறுகியுள்ளது. எனவே, காவிரி தோன்றும் மேற்குப் பகுதியாகிய குடகுக்கும், காவிரி முடியும் கிழக்கு எல்லையாகிய காவிரிப்பூம்பட்டினத்திற் கும் இட்ைப்பட்ட தொலைவுகுறைகிறது. எனவேதான் ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/14&oldid=1018889" இலிருந்து மீள்விக்கப்பட்டது