பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

5 பல ஆறுகளும் காவிரியில் கலந்தன. அதனால் அது அகண்ட காவிரியாயிற்று. தன்பால் குளித்தவர்களின் தீவினைகளைப் போக்கிற்று. அரிச்சந்திரன், அர்ச்சுன்ன், சுசீலை முதலியோரும், ஒரு பன்றி, மண்டு கம் (தவளை) முதலை முதலியனவும் காவிரியில் நீராட நன்னிலை (நற்கதி) கிடைத்தது என்பது, காவிரித் தலப் புராணத் தின் சுருக்கமான வரலாற்றுப் பகுதியாகும். இவ்வாறு கந்த் புராணம், கந்தபுராண வெண்பா முதலிய சில நூல்களிலும் கூறம்பட்டுள்ளது. • wx பிற நூ களிலிருந்து காவிரி வரலாறு காவிரி தோன்றிய வரலாறு, நல்லாற்றுார்ச் சிவப் பிரகாச அடிகளார் இயற்றியுள்ள பிரபு லிங்க லீலை’ என்னும் நூலின் விநாயகர் காப்புச் செய்யுளில் குறிப் பிடப்பட்டுள்ளது. அப்பாடலாவது : “சுர குலாதிபன் தூய்மலர் நந்தனம் பெருக வார்கடல் பெய்த வயிற்றினோன் கரக நீரைக் கவிழ்த்த மத கரி சரணம் நாளும் தலைக்கு அணி ஆக்குவாம்” என்பது பாடல். சுரகுலாதிபன் = தேவர் குலத்தின் தலைவனாகிய இந்திரன். வார்கடல் பெய்த வயிற்றி னோன் = பெரிய கடலை அருந்தி வயிற்றுக்குள் அடக்கி வைத் திருக்கும் அகத்தியன். மத கரி= யானை, விநாயகர். விநாயகரின் திருவடியைத் தம். க்கு அணியாக்குவோம். அகத்தியனின் கமண்டலம் தந்த காவிரி, மண் மடந்தையின் மார்பில் ஒரு முத்து மாலை அமைந் திருப்பது டோல் தோன்றுவதாகச் சேக்கிழார் அருளிய பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது, பாடல் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/17&oldid=1018892" இலிருந்து மீள்விக்கப்பட்டது