பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

6 "ஆதி மாதவ முனி அகத்தியன் தரு பூதநீர்க் கமண்டலம் பொழிந்த காவிரி மாதர் மடந்தை பொன் மார்பில் தாழ்ந்ததோர் ஒதநீர் நித்திலத் தாமம் ஒக்குமால்". (திருநாட்டுச் சிறப்பு-2) காந்தமன் என்னும் அரசன் வேண்ட, அகத்தியரின் கமண்டலம் கவிழ்க்கப்பட்டதாக மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது: (மணிமேகலை-பதிகம் 10,11,12.) "கஞ்ச வேட்கையின் காந்தமன் வேண்ட அமர முனிவன் அகத்தியன் தனாஅது கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை’ என்பது பாடல் பகுதி. கஞ்ச வேட்கை = நீர் வேட்கை. காந்தன் என்பதே அரசன் பெயர். மன் என்பது மன்னன். இதனை, மணிமேகலை நூலின் சிறைசெய் காதையிலுள்ள, - - 'கன்னி ஏவலின் காந்த மன்னவன் இந்நகர் காப்போர் யாரென நினைகி'-27, 28 என்னும் பகுதியாலும் அறியலாம். அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடலிலும் இவ் வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது : 'கன குடகில் நின்ற குன்றம் தரு சங்கரன் குறுமுனி கமண்டலம் கொண்டு முன் கண்டிடும் கதி செய் நதி' (926)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/18&oldid=1018893" இலிருந்து மீள்விக்கப்பட்டது