பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

18 கொண்டிருந்தான். திருமால் அவன் எதிரில் ஆமலக (நெல்லி) மரமாக நின்றார். நான்முகன் தன் கமண்ட லத்தில் இருந்த விரஞ்சா ஆற்று நீரைச் சங்கால் முகந்து முகந்து அம்மரத்தின் அடியில் ஊற்றி வழிபாடு செய் தான். அப்போது, நான்முகன் ஏவலால் பெருங்காற்று அடித்து, அங்கே ஒரு பக்கம் இருந்த அகத்தியரின் கம்.ண்டலத்தைக் கவிழ்த்தது. அந்தக் கமண்டல நீர் நான்முகன் சங்கால் முகந்து ஊற்றிய நீருடன் கலக்கப் பெரிய ஆறு உருவாயிற்று. இதனால் அந்த ஆறு, சைய ஆமலக தீர்த்தம் என்றும் சங்க தீர்த்தம் என்றும் பெயர் பெற்றது. ஆனால் இப்பெயர்கள் வழக்கத்தில் மிகுதியாகப் பயன்படுத்தப் படவில்லை. காவேரி-காவிரி என்னும் பெயரே வழங்கப்படுகின்றது. கம்பர் தன் மகளுக்குக் காவேரி என்னும் பெயர் சூட்டினார் என்பது ஈண்டு நினைவுகூரக் தக்கது. காவிரியை ஒரு சோழன் கொண்டு வந்தான் 676Tajd அவன் பெயர் சித்திர தன்வன் எனவும், சிங்கார வேலு. முதலியார் தொகுத்துள்ள 'அபிதான சிந்தாமணி' என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. மற்றும், அதே நூலில், சசி சேகரச் சோழன் என்னும் சோழ மன்னன் காவிரியில் அணை கட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. அவ்வரலாறாவது : இந்தச் சோழன் தேவ சோழன் என்பவனின் மகனாம். செண்பகவல்லி என்பாளை மணந்து கொண் டானாம். குணவல்லி என்னும் தன் மகளைப் பாண்டிய மன்னனுக்கு மணமுடித்துக் கொடுத்தானாம். எழுபது ஆண்டுகள் அரசாண்டானாம். அடிக்கடி காவிரியில் வெள்ளம் வந்து தொல்லை கொடுத்ததாம். அதற்கு மாற்று வேண்டி நாற்பதுநாள் இறைவனை நோக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/20&oldid=1018895" இலிருந்து மீள்விக்கப்பட்டது