பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

8. காவிரி உரிமை காவிரி நாடு- நீர் நாடு உரிமை காவிரி பாயும் சோழ நாடு காவிரி நாடு, நீர் நாடு புனல் நாடு என்றெல்லாம் பெயர் வழங்கப் பெற்று காவிரியோடு உரிமை கொண்டாடப் பெற்றுள்ளது. சில நூல்களிலிருந்து சில பெயர் ஆட்சிகள் வருமாறு: “காவிரி மல்லல் நன்னாடு'-புறநானூறு-174-8 'நீள் நிலம் கண்டன்ன கொண்டல் வரும் காவிரி நாடு'- முத்தொள்ளாயிரம்-86 'பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம் சேக்கிழார்-பெரிய புராணம்-62 'காய்ந்தசெந் நெல்லின் காடுசூழ் காவிரி நாடு’ - பெ. புரா. "பொன்னி அளிக்கும் புனல் நாடு'-பெ.புரா-1211 சூட்டிய வளர் புலிச் சோழர் காவிரி நாடு'-பெ. புரா மேலுள்ள பாடல்களில் காவிரி நாடு, புனல் நாடு என்று நாடு குறிக்கப்பட்டுள்ளது. சுந்தரர் காவிரிக் கோட்டம்’ என்று குறிப்பிடுகிறார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/47&oldid=1018936" இலிருந்து மீள்விக்கப்பட்டது