பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

காவிரியின் உரிமையாளர்கள் சோழ மன்னர்கள் காவிரிக்கு உரிமை உடையவர் களாக இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். மற்றும், சோழரின் மேலாட்சியின் கீழ்ச் சிற்றரசர்களா யும் குறுநில மன்னர்களாயும் இருந்த பண்ணன், பழையன், மத்தி, அம்பர்கிழான் அருவந்தை தாம்ான், நோன்றிக் கோன் முதலியவர்களும் காவிரியின் உரிமை யாளர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். அதாவது: அவரவர் ஆண்ட பகுதிகளிலும் காவிரியாறு ஒடியுள்ளது என்பது அறியப்படுகிறது. இனிப் பாடல் பகுதிகளைக் காண்போம்: அகநானூற்றுப் பகுதிகள்: 'மாவண் சோழன் கழை மாய் காவிரி அகம்-128-10 'கழ ல் கால் பண்ணன் காவிரி வடவயின்”-அகம் 177-16 'மாரி அம்பின் மழைத்தோல் பழையன் காவிரி வைப்பின் போர் அன்ன'-(போர்-ஒர் ஊர்) அகம்-186-15, 16 'வலம்படு வென்றி வாய்வாள் சோழர் இலங்கு நீர்க் காவிரி’-அகம்-213-21,23.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/49&oldid=1018941" இலிருந்து மீள்விக்கப்பட்டது