பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

50 "நீள் தெங்கின், பாளையில் தேன்தொடுக்கும் பாய்புனல் நீர்நாட்டுக் காளை-99 "வண்புனல் நீர் நாடன்”-101 குலோத்துங்க சோழன் உலா: “அலை எறியும் காவேரி ஆற்றுப் படைக்கு மலையெறியும் மன்னர்க்கு மன்னன்’-29,30 கலிங்கத்துப் பரணி "கவன நெடும்பரி விரதரன் காவிரி நாடுடையான் இருந்தோள் அவனி சுமைந்தமை பாடீரோ அரவு தவிர்ந்தமை பாடீரோ-528 காவிரி நாடுடைய குலோத்துங்க சோழன் நிலத்தைத் தாங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறாகச் சோழர்களும் அவர்களைச் சார்ந்த சிற்றரசர்கள் சிலரும் காவிரிக்கு உரிமை உடையவர் களாக இன்னும் பல நூல்களில் கூறப்பட்டுள்ளனர். மேலே எடுத்துக் காட்டப் பெற்றனவற்றுள், 'முழங்கு நீர்ப் படப்பைக் காவிரிக் கிழவன்” (புறம்) 'காவிரி புரக்கும் நாடு கிழவோன்' (பொருநராற்றுப் படை) என்னும் தொடர்களில் உள்ள கிழவன் கிழவோன் என்பன எண்ணத்தக்கன. கிழவன்-கிழவி என்பவற்றிற்கு, உரிமையுடையவன்உரிமை உடையவள் என்பது பொருளாகும். கிழமை என்றால் உரிமை. ஞாயிற்றுக்கிழமை-திங்கள் கிழம்ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/52&oldid=1018946" இலிருந்து மீள்விக்கப்பட்டது