பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

61 "கங்கையின் புனித மாய காவிரி நடுவு பாட்டுப் பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம்தொண்டரடிப் பொடியாழ்வார்-திவ்வியப்பிரபந்தம் - திருமாலை-894, கங்கையைப் போலவே காவிரியும் தூய தெய்வத் தன்மை உடையதாகத் தொண்டரடிப் பொடியாழ்வார் கூறியுள்ளார். 'பொன்னி நல்நதி மிக்க நீர் பாய்ந்து புணரி தன்னையும் புனித மாக்குவது”- . பெரியபுராணம்-404, புகார் நகரில் காவிரி பாய்ந்து கடலையும் புனித மாக்கும் தீர்த்தமாயுள்ளதாம்-கருத்து. வேம்புலா மலர் நீரால் வழிபட்டுச் செம்பொன் வார் கரை எண்ணில் சிவாலயத்து, எம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம் பொன்னி உம்பர் நாயகர்க் கன்பரும் ஒக்குமால்'-பெ.பு.57. கரையிலுள்ள சிவன் திருக்கோயில்களைக் காவிரி வணங்கிச் செல்வதால், சிவனடியார் போன்றுள்ளதாம். 'காவிரி நீர்ப் பெருந் தீர்த்தம்” -பெ.பு-3577. தன்பால் நீராடிய அருச்சுனன்,அரிச்சந்திரன், சுசீலை ஆகியோர்க்கும், ஒரு பன்றி-மண்டு கம்(தவளை), முதலை ஆகியவற்றிற்கும் காவிரி தீது நீக்கி நற்பேறு கிடைக்கச் செய்ததாம். காவிரியின் இத்தகைய சிறப்பால், தண்ணிர் எனப் படுவது காவிரியே-என்னும் பெரும் பெயர்பெற்றுள்ளது. இது சார்பான ஒரு சிறு கதை வருமாறு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/63&oldid=1018974" இலிருந்து மீள்விக்கப்பட்டது