பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

62 அம்பர் என்னும் ஊரில் வாழ்ந்த சிலம்பிஎன்பாள் ஒட்டக் கூத்தரை நோக்கி, தன்னைப் பற்றி ஒரு பாடல் எழுதுமாறு கேட்டாளாம். ஒட்டக்கூத்தர் எதிர்பார்த்த அளவு அவருக்கு கடமை ஆற்றாததால், அவர் ஒரு வெண்பா ன் முதல் இரண்டடிகளை மட்டும் சுவரிலோ எதிலோ எழுதிவிட்டுச் சென்று விட்டாராம். பின்னர் அங்கு ஒளவையார் வந்த போது, அவர் கூழோ (உணவோ) ஏதோ பெற்றுக் கொண்டு, பின் இரண்டு, அடிகளையும் எழுதி முடித்தாராம். அந்த வெண்பா வருமாறு :- - 'தண்ணிரும் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவதும் சோழ மண்டலமே-பெண்ணாவாள் அம்பர் சிலம்பி அரவிந்தத் தாளணியும் - - செம்பொற் சிலம்பே சிலம்பு'-என்பது முழுப் L! TTL- GU . தண்ணீரில் சிறந்தது காவிரியே. மன்னருள்சிறந்தவன் சோழனே. மண்ணில் சிறந்தது சோழ நாடே. காலில் அணியும் சிலம்புக(ட்) குள் சிறந்தது, அம்பர் என்னும் ஊரில் உள்ள சிலம்பி என்பாள் தன் தாமரை போன்ற 'தாளில் (காலில்) அணியும் சிலம்பேயாகும். - என்பது பாடலின் பொருள். அம்பர் சிலம்பி என்பதற்குப் பதில் அம்பொற் சிலம்பி என்றும் பாடம் சொல்வ துண்டு. ஒட்டக் கூத்தர் முதல் இரண்டடிகளைப் பாடினார் என்பதற்குப் பதில், பொய்யா மொழிப் புலவர் முதல் இரண்டடிகளையும் பாடினார் என்றுகதை சொல்வதும் உண்டு. இந்தப் பாடலால், காவிரியின் மிகு பெருஞ்சிறப்பு புலனாகிறதன்றோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/64&oldid=1018978" இலிருந்து மீள்விக்கப்பட்டது