பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

காவிரி நீராடல் : காவிரியில் நீராடுதலை நற்பேறாக-நல்வினையாகபுண்ணியமாக மக்கள் கருதி நீராடுகின்றனர். ஆடித் திங்கள் பதினெட்டாம் நாளில் நீராடல் சிறப்பாக நடை பெறுகிறது. திருவையாற்றில் ஆடி அமாவாசையன்று நீராடல் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஐப்பசியில் மயிலாடுதுறையில் காவிரிநீராடல் நல்வினை யாகக் கருதிச் செய்யப்படுகிறது. இன்னும், கரையில் திருக்கோயில் உள்ள ஊர்களிலெல்லாம் நீராடல் பெரு மிதமாக நடைபெறுகிறது. இது தொடர்பான இலக் கிய ஆட்சிகள் சில வருமாறு : "புதுவது வந்த காவிரிக் கோடுதோய் மலிர்நிறை ஆடியோரே' அகநானூறு-165-14,15. ஒருத்தி தலைவன் காவிரிநீர் ஆடியதைக் குறிப்பிடு கின்றாள். - ‘விடியல் வந்த பெருநீர்க் காவிரி தொடியணி முன்கை நீவெய் யோளொடு முன்னாள் ஆடிய கவ்வை' அகம்-226 : 10-12 தலைவன் ஒருவன் பெண் ஒருத்தியுடன் நீராடிய தைப் பற்றியது இது. “காவிரிப் பலராடு பெருந்துறை”. குறுந்தொகை 258-3. “5-6ು மண்டு பெருந்துறைக் காவிரி ஆடிய வடமொழி யாளரொடு வருவோன்’மணிமேகலை-5-39,40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/65&oldid=1018982" இலிருந்து மீள்விக்கப்பட்டது