பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

83 னது நெற்றிக்கண் குருடாகிவிட்டதாம். பின்னர் அவன் தன்பங்கில் கரை அடைத் தானாம், இது ஒரு கதை. மற்றொரு கதை இது போன்றதே. ஆனால் சிறு வேற்றுமை உள்ளது. மூன்று கண்கள் உடைய பிரதாப ருத்திரன் என்பவன் கரையை அடைக்க மறுத்தானாம். அவனது படத்தை எழுதித் தரச் சொல்லிக் கரிகாலன் ஒரு வேலால் படத்திலுள்ள மூன்றாவதாகிய நெற்றிக் கண்ணைக் குத்தினானாம். உடனே எங்கோ இருந்த பிரதாப ருத்திரனது மூன்றாம் கண் கெட்டு விட்டதாம், பின்னர் அவன் அஞ்சித்தன் ப்ங்கிலும் கரை கட்டினா னாம். படத்தில் கண்ணைக் குத்தியதும் எங்கோ இருந்தவ னின் கண் கெட்டுவிட்டது என்பது நம்பத் தகுந்ததன்று. பிரதாப ருத்திரனும் திரிலோசனனும் ஒருவராக இருக்க லாம். அவனது படத்தைப் பார்த்துக் கரிகாலன் சினம் கொண்டு படத்திலுள்ள கண்ணைச் சிதைத்திருக்கலாம்: மூன்றாம் கண் என்பது படத்தில் மட்டும் புனைந்து வரையப்பட்டதாய் இருக்கலாம். கரை கட்ட மறுத்த வனது கண்ணைக் குத்தக் கரிகாலன் முயன்றிருக்கலாம். அதற்கு அஞ்சிப் பிரதாபருத்திரன் பின்னர் கரை கட்டி யிருக்கலாம். ஆனால், கரிகாலன் கரை கட்டாதவனது கண்ணைக் குத்தியதாக நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் சில வருமாறு :- - 3 s சென்னிப் புலியே றிருத்திக் கிரிதிரித்துப் பொன்னிக் கரைகண்ட பூபதி' * . --விக்கிரமசோழன் உலா - 25, 26 இமயமலையைச் செண்டால் அடித்து அதில் புலிக் கொடியை நாட்டிய கரிகாலன் காவிரிக்குக் கரை கட்டி, னான்- என்பது கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/85&oldid=1019009" இலிருந்து மீள்விக்கப்பட்டது