பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

84 மண்கொண்ட பொன்னி கரை கட்ட வாராதான் கண்கொண்ட சென்னிக் கரிகாலன்' - -குலோத்துங்கசோழன் உலா - 35, 36 "முழுகுல நதிக்கு அரசர் முடிகொடு வகுத்த கரை முகில் தொட அமைத்த தறிவோம்’ - - - கு.சோ. பிள்ளைத் தமிழ்-3 இகல் முகரி முக்கணிலும் ஒருகண் இழியக் கிழியில் எழுதுகண் அழித்த தறிவோம்”. -கு.சோ. பிள்ளைத் தமிழ் எழுவின் உயர் புய வலியின் ஒரு திரு நதியின் இருகரை கட்டினான். - - • . - கு.சோ. பி. தமிழ் - 48 குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழில், கரை கட்டாதவன் முகரி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். முகரி என்பதற்குச் செருக்கு கொண்டவன் - மாறுபடு பவன் என்பது ப்ோன்ற பொருள் கொள்ள வேண்டும். அவனுக்கு மூன்று கண்கள் இருந்ததாக இந்த நூல் கூறு கின்றது. கரை முகில் தொட அமைத்தது என்பது கரையின் மிக்க உயரத்தை அறிவிக்கிறது. தொழுத மன்னரே கரைசெய் பொன்னியில் தொடர வந்திலா முகரியைப் படத்து எழுதுக என்றுகண்டு இது மிகைக் கண் என்று. இங்கழிக்கவே அங்கழிந்ததும்”. . . . - கலிங்கத்துப் பரணி - 197 கலிங்கத்துப் பரணி ஆசிரியர் செயங்கொண்டாரும் கரை கட்டாதானை முகரிஎன்று குறிப்பிட்டு, அவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/86&oldid=1019011" இலிருந்து மீள்விக்கப்பட்டது