பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

85 மிகைக் கண் (இரண்டுக்கு மேல் உள்ள மிகுதியான கண்) இருந்ததாகக் கூறியுள்ளார். இரங்கேச வெண்பா' என்னும் நூலிலும் - கண்கொண்டான் பொன்னிக் கரைகட்ட 6штЈтгтвобот எண்கொண்ட சோழன் இரங்கேசா”-55 என இந்தச் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது: காவிரி கரை கட்டிய சோழன் கரிகால்வளவன் இற் றைக்கு (1988) ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட சங்க காலத்தவன். இவன் கரை கட்டியதைக் குறிப்பிட்டவர்களுள் செயங்கொண்டார் கி.பி. 11 அல் லது 12 ஆம் நூற்றாண்டிலும், விக்கிரம சோழன் உலாகுலோத்துங்க சோழன் உலா - குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ் ஆகியவற்றை இயற்றிய ஒட்டக்கூத்தர் 12ஆம் நூற்றாண்டிலும் வாழ்ந்தவர்கள். கரிகாலன் காலத்திற்கு ஆயிரம் ஆண்டு காலத்திற்குமேல் பிற்பட்ட களாகிய இப்புலவர்கள் காலத்தில், எப்படியோ கற்ப னையாக மூன்று கண் கதை முளைத்துவிட்டிருக்கிறது. இப்புலவர்களின் காலத்தில் ஆரியப் புராணச் சார்பு வந்துவிட்டது என்பது ஈண்டு நினைவு கூரத் தக்கது. அரும்பாடு பட்டுக் காவிரிக்குக் க ைர கட்டிய கரிகாலன் ஆண்ட சோழ நாட்டில் இப்போது காவிரியில் உள்ள தண்ணிர் வளம் மிகவும் இரங்கத்தக்கது. இன்னும் மிக்க தண்ணிர் சோழ நாட்டிற்குக் கிடைக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/87&oldid=1019014" இலிருந்து மீள்விக்கப்பட்டது