பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

15. கங்கையும் காவிரியும் வடநாட்டில் கங்கை தெய்வத் தன்மை உடைய ஆறாகக் கருதப்படுவதுபோல், தென்னாட்டில் காவிரி யும் தெய்வத் தன்மையுடைய ஆறாகக் கருதப்படுகின் றது. இதனை இந்நூலின் தெய்வக் காவிரி என்னும் தலைப்பிலும் காணலாம். பல நூல்களில் கங்கைக்கு ஏயும் பொன்னி என்ற மாதிரியில் கங்கையும் காவிரியும் இணைத்துக் கூறிச் சிறப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில காணலாம் : "திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அதுவோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி”. . சிலம்பு - கானல் வரி - 2 புகார்க் கடற்கரைச் சோயிலில் ஒருநாள் கோவலனும் மாதவியும் அமர்ந்திருந்த பொழுது, கோவலன் யாழ் மீட்டி, தான் வேறு ஒருத்தியை விரும்பினாலும் மாதவி வருத்தப்பட மாட்டாள் என்னும் குறும்புப் பொருள்பட காவிரிக்கு உரிய சோழன் கங்கையைச் சேர்ந்தாலும் காவிரி வருந்தாது என்பதாகப் பாடிய மறைபொருள் பாடல் இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/88&oldid=1019015" இலிருந்து மீள்விக்கப்பட்டது