பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

87 ' கங்கைப் பேரியாற்றினும் காவிரிப் புனலினும் தங்கிய நீர்ப்படை தகவே உடைத்தென’’ சிலம்பு-25: 120, 121 கண்ணகி சிலை செய்யவிருக்கும் கல்லைக் கங்கை யாற்றில் நீராட்டினாலும் தகுதியே-காவிரிப் புனலில் நீராட்டினாலும் தகுதியே- என்பது இதன் கருத்து. கங்கையின் நீர் கொணர்ந்தோ காவிரியின் நீர் கொணர்ந்தோ கொங்கையிள நீர்க்குடம் நிரைத்து’’ -இராசராசசோழன் உலா - 457, 458 கங்கை நீராலோ காவிரி நீராலோ குடத்தை நிரப்பி யதாகக் கூறுகிறது. இப்பாடல். இதே நூலில், கங்கை, காவிரி முதலிய ஆறுகளில் மங்கையுடன் சோழன் ஆடிய தாகக் கூறுகிறது : கங்கையும் நன்மதையும் கெளதமியும் காவிரியும் மங்கையுடன் ஆடும் மரபினோன்’- 43, 44 என்பது பாடல் பகுதி.

பொன்னிக்கும் கோதா விரிக்கும் பொருனைக்கும்

தன்னிக்கும் கங்கைக்கும் காவலனை-சென்னியை” இ. ரா. சோ. உலா-463,464, ஒரு காலத்தில் சோழர் பொன்னி (காவிரி), கோதா விரி, பொருனை, கன்னி (கன்னியா குமரியாறு), கங்கை ஆகியவற்றிற்கெல்லாம் தலைமை பூண்டிருந்தமையை அறிவிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/89&oldid=1019017" இலிருந்து மீள்விக்கப்பட்டது