பக்கம்:தமிழ்க் காதல்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

135


அகத்திணைத் தோற்றம் 135 இடமறிந்து நடந்து கொள்ளும் என் காதலி, நெஞ்சே! எத் தன்மையள் தெரியுமா? அவள் இரண்டறி கள்வி' என்று தலைவன் காதலாளின் அறிவுத் திறத்தை வியக்கின்றான். கூந்தலில் பெய்த மலர், தானே உதிரவில்லை; வேண்டுமென்றே உதிர்க்கின்றாள். ஏன்? "உதிர்த்து” என்ற பிறவினையை நினைக கன்னியர் மலர் சூடுவது இயல்பு வழக்காயின், தலைவன் அணிந்த மலரையும் இயல்பு வழக்குப் போலப் பெற்றோர்க்குக் காட்டிவிடலாமன்றோ? அன்னை முன் பூ விழுந்தபோது தலைவி அவலப்பட வேண்டாமன்றே? அன்னையும் அதிர்ச்சியுற வேண்டுவதில்லையே! அன்போடு சூடிய பூவை அச்சத்தோடு நினைந்து உதிர்த்தாள் எனின், குமரியர் பூவணிதல் சமுதாய வழக்கிற்கு ஒவ்வாக் காட்சி என்பது தெளிவு. முல்லைக் குமரியின் கவலை பெய்போ தறியாத்தன் கூழையுள் ஏதிலான் கைபுனை கண்ணி முடித்தாளென்று யாய்கேட்பின் செய்வதி லாகுமோ மற்று. (கவி. 107) குமரிப் பெண்ணாள் ஒருத்தியின் கவலையை இம் முல்லைக்கலி உணர்த்துகின்றது. அவள் கவற்சிக்குக் காரணம் என்கொல்? முல்லைத்திணையில் ஏறுகோள்விழா நடந்தது. பார்வையாளராகக் குமரியரெல்லாம் குழுமியிருந்தனர், செவியிலே மறையுடைய ஒரு காளையை இடையன் மடக்கினான், அடக்கினான். அக்காளை தன் கொம்பினால் அவன் தலையிற் சூடிய முல்லைச்சரத்தை எடுத்து மாட்டிக்கொண்டு சுழற்றியது. கொம்பு சுழன்ற வேகத்தில் ஒரு முல்லைப்பூ தனித்துச் சென்று எங்கோ இருந்த இடைமகளின் கூழைக் கற்றை யுள்ளேபோய் விழுந்தது. ("அப்பூ வந்து என் கூழையுள் வீழ்ந்தன்று”). இழந்த பொருள் எதிர்பாராது கிடைப்பின், ஆசையோடு அதனைப் போற்றிக்கொள்வதுபோல, தானே வந்து கூந்தலில் விழுந்த பூவைக் கீழே நழுவி விழாதபடி அந்த ஆய்மகள் தலையில் முடித்துக் கொண்டனள். விழாவிற்கு வந்த பெண்கள் சிலர் கண்ணிலேனும் இந் நிகழ்ச்சி பட்டிருத்தல் கூடும். காதலிற் கண்டதைக் காணாதார்க்குப் போய்க் கூறினாலல்லது சில கண்களுக்குத் தூக்கம் வந்தொழியா; ஆதலின், முல்லைப்பூவை முடித்துக் கொண்டமை கண்ட மாதர்கள், தம் வீட்டுக்கு நேரே செல்லாது அவள் அன்னைக்குச் சென்று அலர் சொல்லியிருத்தல் கூடும். இந்நிலையில் என்ன செய்வேன்? எங்ங்னம் தாயைக் காண்பேன்? கேட்டால், எதனை மறுமொழிவேன்’ என்று துடிக்கின்றாள் முல்லைமுடித்த கூந்தலி. 'இவள் கூழைக் கூந்தல் இதுவரை மலர் பெய்து அறியாதது, ஒரு பூமேல் ஆசைகொண்டு இவள் தானே சூடிக்கொண்டாலும், அதுவே தவறாம். அயலான் கைதொட்டுத் தலையில் வைத்த கண்ணிப் பூவந்து விழுந்ததெனின், ஏறிட்டுப் பாராது எடுத்து எறிய வேண்டியதிருப்ப, என் மகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/149&oldid=1238455" இலிருந்து மீள்விக்கப்பட்டது