பக்கம்:தமிழ்க் காதல்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

தமிழ்க் காதல்


மொழிகின்றான் (குறுந் 116). அன்பும் சாயலும் என்பை இளக்கும் இன்சொல்லும் வாய்ந்த இளங்காதலியோடு முயங்கியிருக்கின்றேன் இன்று நாளை நீரற்ற பாலை வழியில் எவ்வளவு கவலைப்பட வேண்டும்? காதலியின் இன்பத்தை விட்டுக் காட்டின் துன்பத்தை அடையேன் என்று பொருள் விரும்பிய தன் நெஞ்சிற்கு விளம்புகின்றான் (அகம். 225). தலைவியைப் பிரிந்துபோகும் தலைவன் சிறிது தொலை சென்றபின் திரும்பத் தன்னுரைப் பார்க்கின்றான்; மன்றம் தோன்றவில்லை, மரங்களின் தோற்றமும் வரவரக் குறைந்துவிட்டது என்று நெஞ்சோடு சேர்ந்து இரங்குகின்றான் (அகம் 239).

அணிவளை முன்கை ஆயிதழ் மடந்தை
வார்முலை முற்றத்து நூலிடை விலங்கினும்
கவவுப்புலந் துறையும் கழிபெருங் காமத்து
இன்புறு துகர்ச்சியிற் சிறந்ததொன் றில்லென
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்

பொருள்புரி வுண்ட மருளி நெஞ்சே (அகம். 961)

பொருளைக் காதலித்த நெஞ்சிற்கு,அகலாது அகத்திட்டுத் தழுவும் காதலியின் காதலே பொருள் என எவ்வளவோ எடுத்து உரைத்தான் தலைவன். நெஞ்சு பிடிவாதம் செய்தது, புறப்பட்டான். பொருள் ஈட்டப்போகும் நடுவழியில் நெஞ்சு பின் வாங்கிற்று. காதலியை மீண்டும் தழுவ விழைந்தது. இப்போது தலைவன் பிடிவாதம் செய்கின்றான். பலமலைகள் கடந்து வந்தபின், வீடுதிரும்ப, விரும்புவதிற் பயனென்ன மருளிநெஞ்சே என்று கடிந்துரைக் கின்றான். ஒருமுறை க்ாடுகடந்துபோய்ப் பொருள் தேடிவந்த தலைமகன் மறுமுறை போக விரும்பவில்லை. பொருள் தொகுக்கப் போ போ என்று அவன் நெஞ்சு தூண்டுகின்றது. தன் நெஞ்சின் உறுதியை நம்பவில்லை தலைவன். மனைவியோடு உறையும் போது பொருளுக்குப் புறப்படச் சொல்லும் எனவும், புறப்பட்டுப் போகும் நடுவழியில் காதலியின் கண்களை நினைப்பித்து வீட்டுக்குத் திரும்பச் சொல்லும் எனவும், நெஞ்சின் மாறாட்டத்தை அறிந்தவன் தலைவன் ஆதலின், நின்போலி மொழி எனக்கு உறுதுணையாகாது என்று நேர்படக் காட்டிச் செலவழுங்குகின்றான் (அகம். 3) மனத்தை நோக்கிக் கூறுந்தொறும் கருத்துப் புதுவதாக அமைப்பர் இளங்கீரனார். அதனால் ஒருதுறையில் பல்வேறு உள்ளோட் டங்களை அறிகின்றோம்.

தலைவன் பிரிந்து சென்று வேற்றுநாட்டில் வினையில் ஈடுபட்டிருக்கும்போது, மனைவி நினைவுவந்து துயர்ப்படலாகாது என்பதும், துயர்ப்பட்டான் எனப் புலவன் பாடலாகாது என்பதும் அகத்திணை வழக்கு. அவ்வழக்கிற்கு முரணாதபடி, தலைவனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/299&oldid=1394738" இலிருந்து மீள்விக்கப்பட்டது