பக்கம்:தமிழ்க் காதல்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

287


பிரிவுத் துன்பம் உற்றான் என்று பாடுந்திறல் ப்டைத்தவர் இளங்கீரனார். முன்பிரிந்த காலங்களில் எய்திய துன்பங்களை மறுபடி பிரிவதற்கு முன்னரே வீட்டிலிருந்து கொண்டு நயமாக எடுத்துரைக்கிறான் தலைவன். பொருளுக்குப் புறப்படு என்று ஊக்கும் நெஞ்குக்கு, பிரிந்தால் என்ன வழித்துயர் உறுவோம் எனச் சுட்டிக் காட்டுகின்றான். காதலியைப் பிரிந்து சிறிதிடம் கடந்தபின் மறையும் ஊரைப் பார்த்து"சிறுநல் ஒருத்தி எம்பெருநல்லூர்” என்று நினைத்துக் கவல்கின்றான். இடைச்சுரத்தின் கண்ணும் தலைவியின் - வருத்தக் கண்களைக் கண்டு புலம்புகின்றான். வீட்டிலிருந்தோ, சிறிது புறப்பட்டோ, போகும் இடைவழியிலோ காதலியை நினைந்து தலைவன் கவல்வன் என்று, அவன் கவல்விடங்களைப் புனைவர் புலவர். வினைக்குரிய இடத்திற்குச் சென்றபின் கவன்றான் என்று சொல்லாமல் அதற்கு முன்னிலையில் வைத்துப் பாடல்களை அமைப்பர் என்று அறிக. - s

இளங்கீரனாரின் அகத்தலைவி தலைவன் பிரிவுக்கு இரங்குபவள் ஆயினும், பிரியக்கூடாது என்று தடுப்பவள் அல்லள். கணவன் பிரிந்துசென்று போய்த் தன்னைப்பற்றிக் கவலைப் படக் கூடாதே என்று, அவனை இனிய சொற்கள் பலகூறி வழி விட்டனள். “நெருநலும் தீம்பல மொழிந்த சிறுநல் ஒருத்தி” என்று மனைவியின் தனிப்பண்பினை உள்ளுகின்றான் தலைவன். தலைவனை வழிவிடும்போது தலைவி மொழிந்த இரண்டு கருத்துக்கள் புதியன, போற்றத்தக்கன, இளங்கீரரின் எண்ணத்தைக் காட்டுவன.

ஈட்டருங் குரைய பொருள்வயிற் செலினே
நீட்டுவிர் அல்லிரோ நெடுந்தகையீர் (அகம். 939)
நாநடுக் குற்ற நவிலாக் கிளவியொடு
அறல்மருள் கூந்தலின் மறையினள் திறல்மாண்டு

திருந்துக மாதோ துஞ்செலவு (அகம். 29)

தலைவன் பிரிகதில் பிரிந்தபின் குறித்த காலத்திற்குமேல் நீடித்தலாகாது. ஆதலின் காலம் தாண்ட மாட்டீரே (நீட்டு விரல்லிரோ) என்று ஆசைபட அறிவுறுத்துவாள் தலைவி. பிரிவுக்கு இசைந்ததனால் அவளுக்கு மனத்துயர் இல்லையா? நிரம்ப உண்டு. காலைத் திங்கள்போல ஒளி மழுங்குகின்றாள்; கண்ணிதழ்கள் நீரை விடுகின்றன; கால்கள் பின்னுகின்றன. நா யாதும் மொழிய நடுங்குகின்றது. எனினும் பொருள் வேண்டும். அதற்குத் தலைவன் பிரியவும் வேண்டும். ஆதலின் வாழ்த்துகின்றாள். எல்லாத் திறமைகளும் பொலிகதில், நும் செலவு செம்மையாகுக தில்” என்று அவன் நெஞ்சம் குளிரப் பண்பு மொழிகளை வழங்குகின்றாள். மனைவி வாழ்த்து கணவன் மனத்துக்குப் பெருங்கள்ளாகும்; அவன் வினைக்குப் பெருந்துணையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/300&oldid=1394739" இலிருந்து மீள்விக்கப்பட்டது