பக்கம்:தமிழ்க் காதல்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

தமிழ்க் காதல்



8. இளந்தேவனார்

இப்புலவர் பாடிய அகப்பாடல்கள் நான்கு அவற்றுள் மூன்று அகநானூற்றில் உள. களவினைச் சார்ந்தன. எல்லாக் களவுப் பாடல்களிலும் இரவுக்குறியை அமைத்துப் பாடியிருத்தலின், இரவுக்குறி இளந்தேவனார் என்று இப்புலவரை அழைக்கலாம். களவொழுக்கத்தில் தலைவனுக்குமுன் தோழி பேசுவதே பெரு வழக்கு. தலைவி கூற எண்ணுங் கருத்துக்களைத்தாம் அவள் சார்பகாத்தான் தோழி கூறுவாள். எனினும் நனிநாணுடைய தலைவியின் கூற்றாக்குவதில்லை. அன்பும் அறிவும் உடைய தோழியைக் கூற்றாக்குவதே பொதுவியல்பு. இளந்தேவனாரின் களவுப்பா மூன்றிற்கும் தலைமகளே கூற்றாவாள் என்று புதுமையைக் காண்கின்றோம்.

இளந்தேவனாரின் அகத்தலைவி துணிவினள், துடிப்பினள், நேரியள், காமத்தள், வீட்டில் எல்லாரும் உறங்கிய அமையம் பார்த்து, மெல்ல எழுந்து புறஞ்சென்று, தோட்டத்து மரத்தில் ஒண்டிக் கொண்டு நெடுநேரம் நிற்கின்றாள். நள்ளிரவு, வாடைக் காற்று, மழைத்துளி எவற்றையும் பொருட்படுத்தாது தனியாக நிற்கின்றாள்.

வனைந்துவரல் இளமுலை ஞெமுங்கப் பல்லூழ்
விளங்குதொடி முன்கை வளைந்து புறஞ் சுற்ற

நின் மார்பு அடைதலின் இனிதா கின்றே (அகம். 58)

தலைவனது அகலத்தைக் கட்டித்தழுவ விழையும் தலைவியின் நிறையா வேட்கையைக் காண்மின். முயங்குதொறும் முயங்கு தொறும் அவனது மார்பை முகந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகின்றாள் தலைவி. w களவை நீட்டித்தல் தலைவிக்கு விருப்பமில்லை. களிற்றினங்கள் திரியும் பெருங்காட்டு வழியில் வேலேந்தி நடுயாமத்துத் தலைவன் வருவது அவளுக்கு உவப்பில்லை. “அரை நாள் இரவு இவண் நீ வந்ததனினும் இனிதாகின்றே (அகம். 268) என்று தலைவனுக்கு எதிரே கூறுகின்றாள். கற்பு வாழ்க்கை எய்தி கருவுற்று மகப்பேறு அடையும் விருப்பம் இவளுக்கு உண்டு.

அடக்குவம் மன்னோ தோழி மட்ப்பிடி
மழைதவழ் சிலம்பிற் கடுஞ்சூல் ஈன்று
கழைதின் யாக்கை விழைகளிறு தைவர
வாழையஞ் சிலம்பிற் றுஞ்சும்

சாரல் நாடன் சாயல் மார்பே - (அகம். 328)

ஆண்யானை மெய்யைத் தடவிக்கொடுக்கப் பெண்யானை முதற் கன்றை ஈன்று தூங்கும் இடம் என்று தலைவனுடைய மலையைக் குறிப்பதால், அவளுடைய கருவேட்கை பெறப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/301&oldid=1394740" இலிருந்து மீள்விக்கப்பட்டது