பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. காப்பிய இலக்கணங்கள் (1)

காப்பியப் பெயர்கள்.

காப்பியம் என்பது காவ்யம் என்னும் வட சொல் லின் திரிபு என்பது முன்னர்க் கூறப்பட்டது. அதனைத் தமிழில் பொருட்டொடர் நிலைச் செய்யுள், கதைச் செய், யுள், அகலக் கவி, தொடர்நடைச் செய்யுள், விருத்தச் செய்யுள் எனப் பலபடியாக வழங்குவர்.

நச்சிஞர்க்கினியர் சிந்தாமணி உரையில் அந்நூலைத் தொடர்நிலைச் செய்யுளென்றே கூற வேண்டு மென்றும், காப்பிய மென்று கூறுதல் தகாதென்றும் உரைத்தார். முந்து நூல்களில் காப்பிய மென்னும் வடமொழியால் தொடர்நிலைச் செய்யுட்குப் பெயரின்மை அவர் அங்ங்னம் உரைத்தற்கு ஒரு காரணம்.

அடியார்க்கு நல்லார், பெருங் கதையிலும் சீவக சிந்தாமணியிலும் மணிமேகலையிலும் காப்பியம் என்னும் பெயர் வந்ததை எடுத்துக் காட்டி, சொற்ருெடர்நிலை போருட்டொடர்நிலை யென்னும் தொடர்நிலைச் செய்யுட்

1. கூத்தியர் இருக்கையும் சுற்றிய தாகக், காப்பிய வாசகன “ಐತೆ

தவை சொல்லி. -பெருங். 4.3:41-2.

3. 'கருதுவ தங்கொன் துண்டோ காப்பியக் கவிகள் காம, எரிபெற விகற்பித் திட்டார்-ச்வக. 1585.

մ՝

3. "காடகக் காப்பிய கன்னுரல் நுனிப்போர்’-மணிமேகலை, 19:80.