பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

കtിധ இலக்கணங்கள் '67

கும் காப்பியம் என்று பெயர் கூறுதலும் ஆசிரியர் கருத் தென உணர்க' என்று கூறியுள்ள பகுதி நச்சினர்க் கினியர் கூற்றுக்கு ஏற்ற, மறுப்பை உணர்த்துகின்றது. பெருங்கதையில், "காப்பியக் கோசமும்' என்று பிறிதோரிடத்திலும் காப்பியம் என்னும் சொல் வருகின் றது. சிலப்பதிகார அரும்பதவுரை ஆசிரியர் அந்நூலைக் காவியமென்றே கூறுவர்: இளங்கோவடிகள் தாம் துறந்து இக் காவியம் செய்தார்', 'உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்-பாட்டும் உரையும் கலந்து வந்த காவியம்.'

வீரசோழியக்காரர் காப்பியம் என்னும் பெயரை வழங்குவார்."

கோப்பிற் பொருளன. காப்பியம் ஆகும்’ என்பது அவர் சூத்திரம். அந் நூலின் உரையாசிரியர், காப்பியமாவது பெருநூலாம் என்பர். பிறிதோரிடத் தில் அகலக் கவியென்றும் குறிப்பர். பொருட்டொட்ர் நிலை மிகவும் விரிவுடைய தென்பர் மாறனலங்கார உரை யாசிரியர்." தண்டியலங்கார ஆசிரியர் காப்பிய ம், தொட்ர் நிலைச் செய்யுள் என்னும் இரண்டையும் ஒன்றன் பெய. ராகவே அமைப்பர். அவரைப் பின்பற்றியே பின் வந்த ஏனை இலக்கண நூலாரும் கூறுவர். -

தக்கயாகப்பரணி உரையாசிரியர் ஓரிடத்தில், முன் னர்ப் பாட்டில் இன்னதனுல் இன்னது கெட்டதென்று உணர்த்தலாகாததை இப்பாட்டிற் கண்டுகொள்க, தொடர்நடைச் செய்யுளாதலின்' என்ருர். இங்கே, தொடர் நடைச் செய்யு ளென்றதும் காப்பியத்தையே ஆகும். பல

சிலப். ப. 6-s. 2. பெருங்கதை, 1.38; 107: பதிகம், 2. உரை. 4. பதிகம், 87, உரை. - அலங்காரப் படலம், 36. 6. மாறனலங்காரம், 71, உரை. தாழிசை, 633, உரை.