பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தமிழ்க் காப்பியங்கள்

செய்யுளும் கூடிப் பொருட்டொடர்புடைமை காப்பியத் தின் இலக்கணமாதலின் இப் பெயர் வந்தது.

- வடமொழித் தண்டியாசிரியர் தம் காவ்யாதர்சத்தில் மகா காவியத்திற்குச் சருக்கபந்தமென்னும் பெயர் ஒன்று கூறுவர். பல சருக்கங்களை உடைமையின் இங்ங்ணம் அமைத்தன ரென்று தோற்றுகின்றது.

காப்பிய வகை

வடமொழியில் காப்பியமென்று கூறப்படும் நூல் களைத் தமிழில் பொருட்டொடர் நிலைச் செய்யுளென்று வழங்குதலே பெரும்பான்மை வழக்கம். நூல் முழுவதும் தொடர்ச்சியான பொருளுடைமையினுல் இப்பெயர் அமைந்தது; இதுபற்றியே கதை தழுவாத மலைபடுகடாம் போன்ற சில நூல்களையும் பொருள் தொடர்ச்சியாக அமைந்த அமைப்புக் கருதிப் பொருட்டொடர்நிலைச் செய்யுளாக உரையாசிரியர்கள் கூறிப் போந்தனர். இங்ங்ணம் வரும் முருகாற்றுப்படை முதலியவற்றையும், கோவை, உலா, தூது முதலியவற்றையும் ஒரு வகையில் பொருள் அருது தொடர்ந்து வருவது நோக்கிப் பொருட் டொடர் நிலைச் செய்யுளென்றே கூறுவது பொருந்தும். தண்டியலங்கார உரையாசிரியர் கோவையைக் காப்பியங் களிலே சேர்த்து எண்ணுகிருர். வடமொழியிலும் தூது நூலாகிய மேகலந்தேசம் முதலியன சிறந்த காப்பியங் களாகக் கருதப்படுதல் காண்க.

பொருள் தொடர்ந்து வருவதும், பல அடிகளா லேனும் பல செய்யுட்களாலேனும் அமைவதும்.பொருட் டொடர்நிலையின் இயல்புகளாம்.