பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 69

இங்ஙனம் அமைந்த பொருட்டொடர் நிலைகளைச் சிறப்பு நோக்கி மூன்று வகையாகப் பிரிக்கலாம்:

(1) பொருள்மட்டும் தொடர்ந்து, கதை தழுவாது

வரும் தொடர்நிலைச் செய்யுள்.

(2) பொருள் தொடர்ந்து கதை தழுவி வருவனவற் றுள் அறம் பொருள் இன்பம் வீடென்னும் நான்கில் சிலவற்றையே பயணுக உடையன.

(3) கதை தழுவி வருவதோடு, அறம் பொருள் இன்

பம் வீடு என்னும் நாற்பொருளையும் கூறுவன. மேற்கூறியவற்றுள் முதல் வகையில் பத்துப் பாட் --

டும், பொருள் தொடர்புடைய பிரபந்தங்களும் அடங்கும்.

இரண்டாவது வகையில், மணிமேகலை, நீலகேசி, பெரிய புராணம், வேறு புராணங்கள் முதலியன அடங்கும்.

மூன்ரும் வகையில் பெருங் காப்பியங்களும் நாடகக் காப்பியங்களும் அடங்கும்.

முதல் இரண்டு வகைகளையும் காப்பியம் என்னும் பெயரால் வழங்குவர். மூன்ருவதை முடிபொருட்டொடர் நிலை யென்பர்; அகலக் கவி யென்பதும் இதுவே: மகா காவியம் என்று வடமொழியில் கூறுவர்.

இரண்டும் மூன்றும் கதைச் செய்யுள் என்னும் பகுப்பில் அமைவன. பிற்காலத்தில் எழுந்த காப்பியங் கள் யாவும் இப் பகுப்பு இரண்டனுள் அமைவனவேயாம்.

இத்தகைய காப்பியங்களின் இலக்கணங்களை அறிவ தற்குத் துணைபுரியும் நூல்களைப்பற்றிய செய்திகள் முன்பு கூறப்பட்டன. அவ்விலக்கண நூல்களால் அறியும் செய்திகளை இனி ஆராய்வோம்.