பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தமிழ்க் காப்பியங்கள்

வடமொழியில் காப்பிய இலக்கணங்களை விளக்கும் நூல்களில் பெரும்பாலும் காப்பியத்தின் பொது இலக் கணம், காப்பியங்களின் வகை, காப்பியத்தில் அமையும் அணிகள், சுவைகள், குணம், குற்றம் என்பவற்றைப் பற்றிய செய்திகள் உள்ளன. தமிழ் நூல்களில் இந்த முறை இல்லாவிடினும் இத்தகைய இலக்கணங்கள் அங்கங்கே இருத்தலைக் காணலாம். -

- தொல்காப்பியம்

தொல்காப்பியத்தில் காப்பிய இலக்கணங்களாக உள்ள செய்திகளில் இங்கே கூறிய அமைப்புக்களிற் பெரும்பாலானவை உள்ளன. முன்பு, தொல்காப்பியத் தில் வந்த நூல் வகைகள் இன்னவென்பது கண்டோம். அவற்றுள் பா என்னும் காப்பிய வகைகளைப்பற்றிய, செய்திகள் செய்யுளியலில் வனப்பைப்பற்றிக் கூறும் பகுதியில் வருகின்றன. அங்கே உள்ள சூத்திரங்களும் அவற்றின் உரைகளும் ஆராய்தற்கு உரியன.

வனப்பிலக்கணமும் காப்பிய வகையும் தொல்காப்பியர் செய்யுளியலில் அம்மை, அழகு தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்று எட்டுவகை வனப்புக்களைக் கூறுகிருர், அவற்றைச் செய்யுள் உறுப்பெனக் கூறுவர்.'

இவ்வெட்டும் தொடர்நிலைச் செய்யுட்களில் வருவன. வென்பது உரையாசிரியர்கள் கொள்கை. வனப் பென்னும் அத் தலைப்பின்கீழ்க் கூறப்படும் இலக்கணங் களில் பெரும்பாலன் தொடர்நிலைச் செய்யுளோடு தொடர்புடையனவே.

. தொல்காப்பியம், செய்யுள், 1.