பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ. 121

இவ்வாறு பாடிக் கொண்டே நடந்து தில்லையை அடைந்த நாவுக்கரசர், சிற்றம்பலத்தை நெருங்கியதும், அரியானை என்று தொடங்கும் தாண்டகத்தைப் பாடலுற்றார். தாண்டகப் பாவினும் சிறியவும் பெரியவும் என இருவகையுண்டு. அவற்றைப் பிறரெல்லாம் குறுந்தாண்டகம் நெடுந் தாண்டகம் என்பர். நாவரசர் பாடியவை நெடுந் தாண்டகமாகவும், சேக்கிழார் பெரிய திருத் தாண்டகம் என்று குறித்து, அதனை அடியார்கள் எப்போதும் ஒதியோதிச் சிந்தைக்கண் நீங்காதவாறு, பாடுவர் என்ற கருத்துப் புலப்பட “அவர்தம் சிந்தை பிரியாத பெரிய திருத்தாண்டகச் செந்தமிழ்” என்று குறிக்கின்றார். செந்தமிழ் என்றதனால், இத் தாண்டகம் அரிய செஞ்சொற்களே கொண்ட மைந்தது என்பது பெற்றாம்.

அரியானை யந்தணர்தஞ் சிந்தையானை

யருமறையி னகத்தானை யணுவை யார்க்குத் தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்

திகழொளியைத் தேவர்கடங் கோனை மற்றைக் கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்

கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றப்புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. இதன்கண், அரியவற்றுள் எல்லாம் அரிய பொருளாதலின் பரம்பொருளை அரியானை என்றும், அந்தணர் சிந்தையுள் அகலாமை பற்றி