பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


134 ஒளவை சு. துரைசாமி

உலகில் அழகுடையவென எத்தனையோ பொருள்களும் இடங்களும் கூறப்படுகின்றன. உலகு களும் எத்தனையோ பல உள்ளன. அவ்வழகுகள் அனைத்தும் ஒருங்கே திரண்டு மண்ணில் தில்லைப் பதியகத்தை வந்தடைந்தது போலும் அழகு மலிந் துளது. அவற்றிடையே தூய அன்பர்கள் போற்றிப் பரவும் பொன்னம்பலம் நடுவில் இருக்கிறது; அதனைச் சுற்றி ஓர் அழகிய வீதியுண்டு. நம்பி ஆருரர் அதனை அடைந்ததும் அடியற்ற மரம் போல் வீழ்ந்து வணங்கினார். பின்பு அதனை வலம் வந்து திருவாயிலை அடைந்தார்.

எதிரே சிற்றம்பலம் தெரியக்கண்டதும், அதன் கண் கூத்தப்பிரானது ஆடற்கோலம் கட்புலனாக, அவருடைய கைகள் தாமே குவிந்தன. திருக்கூத்தால் வையகம் வாழ்கிறது; மறைகளில் ஞானவொலியை எழுப்பும் சிலம்பு ஒலிக்க அறிவு வெளியில் ஆடும் பெருமானை அறிவால் காண்கின்றார். ஆன்மவறிவு வழி நிற்கும் கண்கள் ஆடும் பெருமான் திருவடியில் திளைக்கின்றன; மனமுதலிய அந்தக் கரணங்கள் அக்காட்சியில் கலந்துவிடுகின்றன. ஆன்மவட்டத்தில் ஊறிப் பெருகும் மெய்யன்பு மிக்கெழுந்து உந்துதலால், அம்பலத்தை அடைதற்குரிய களிற்றின் முகவடிவில் அமைந்த படியே அடைந்து நம்பி யாரூரர் வணங்கி எழுகின்றார்.

அந்நிலையில் அவருடைய உடலும் கருவி கரணங்களும் தம்மில் ஒடுங்கி ஒன்றுகின்றன.