பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8

கயிலையும் அரசும்

வரலாற்றுக் காலத்திலிருந்தே தமிழகத்திற்கும் வடக்கில் இமயத்திற்கும் தொடர்புண்டு. இமயத் தாபதர் தென்குமரி போந்து நீராடுவதும், தென்னகத் துறவியரும் வேந்தரும் வடவிமயம் சென்று கங்கை நீராடுவதும் மரபாக இருந்து வந்துள்ளன. தென்தமிழ் வேந்தர் வடவிமயத்தில் தங்கள் புலி வில் கெண்டை முத்திரைகளைப் பொறிப்பது சிறப்புடைச் செயலாக மேற்கொண்டு வந்தனர்.

பின்பு சமய வாழ்வு உலகியல் வாழ்விற் சிறப்பிடம் பெற்றது. அரசியல் பொருளியல் முதலிய வாழ்வியல்களைக் கைதுறந்து சமயம் கூறம் புராண வரலாறுகட்குத் தலைமையிடம் தந்து பயில்வது முறையாகக் கொண்டனர். சமய ஞானிகள் வடவிமயத்தினின்றும் தென் குமரி நோக்கிப் படர்ந்து தமது சமயவுண்மைகளையும் வரலாறுகளையும் மக்களிடையே பரப்பினர். அவ்வாறே தென்னாட்டுச் சமய வாழ்வினர் வடபுலநோக்கிச் சென்று ஆங்கு வழங்கிய சமய தத்துவ சாத்திரங்களைப் பயின்றனர்.