பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் இ. 147

வந்ததும், காரைக்காலம்மையார் வடகயிலை நோக்கிச் சென்றதும் பெளராணிகவுலகில் காலத் தொடு படாது கலந்து வந்த வழக்காறுகளாகும்.

அவ்வகையில் 1300 ஆண்டுகட்கு முன் பல்லவராட்சி புகழ் பரந்து பொலிந்து விளங்கிய

காலத்தில் திருநாவுக்கரசர் தமிழ்நாட்டில் சிவ - பெருமான் எழுந்தருளும் திருக்கோயில்கட்குச் சென்று திருப்பதிகம் பாடிச் செந்தமிழ்ச் சைவத் தொண்டு ஆற்றிவந்தார். அக்காலத்தே சீர்காழியில் தோன்றிச் சிவனருளால் உமையம்மை தந்த சிவஞானப்பாலையுண்டு திருஞானசம்பந்தர் நாவுக்கர்சர் போலவே திருக்கோயில் சென்று திருப்பதியம் ஒதும் திருப்பணி செய்தார். இருவரும் செந்தமிழ் நாட்டு எல்லைக்குள் இருந்து இனிய சைவப்பணி புரிந்துவருகையில் திருநாவுக்கரசர்க்கு வடவியமத்தில் சிவனுறையும் திருக்கயிலை சென்று காண வேண்டுமென்ற வேட்கையுண்டாயிற்று. கார்ைக்காலம்மையார் கயிலை சென்ற வரலாறு அவர் கருத்தை உருக்கிற்றுப் போலும், காளத்தி சென்று கண்ணுதற் பெருமானை வழிபட்ட நர்வுக்கரசர் கயிலை நோக்கிச் செல்வாராயினர். சிவபெருமான் பேணுதிருக்கயிலைமலை வீற்றிருந்த பெருங்கோலம் காணுமது காதலித்தார், கலைவாய் மைக்காவலனார்’ என்று சேக்கிழார் தெரிவித் திருக்கின்றார். - -