பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 ஆ ஒளவை சு. துரைசாமி

“குவளைக் கருங்கண் கொடியிடை துன்பம் தவிர அன்று துவளத் தொடுவிடம் தீர்த்த தமிழின் துறை செய்தவன் திவளக் கொடிக்குன்ற மாளிகைச் சென்னியின்வாய்த் தவளப் பிறைதங்கு சண்பையர் காவலன் சம்பந்தனே”

என்று திருச்சண்பை விருத்தமும் சிறப்பித்துக் கூறுகின்றன. -

திருவுலாமாலையில் இச்செய்தியை வேறொரு வகையால் விதந்து பரவுகின்றார். நம் ஞானசம்பந்தப் பெருந்தகை திருவீதி உலா வருகின்றார். இவர் நலம் கண்டு மகளிர் சிலர் கருத்திழந்து மெலிந்து தம்முட் சொல்லாடுகின்றனர். அமணரை வாதில்வென்று கழுவேற்றிய இவன் தன் மாலையை நமக்குத் தருவான் என்று நாம் கருதுவது பேதைமை என்ற கருத்துப்பட

-நங்கைமீர், இன்றிவன் நல்குமேல் எண்பெருங் குன்றத்தில் அன்றமணர் கூட்டத்தை ஆசழித்துப் -பொன்ற உரைகெழுவு செந்தமிழ்ப்பா வொன்றினால் வென்றி நிரைகழுமேல் உய்த்தானை நேர்ந்து - விரைமலர்த்தார் பெற்றிடலாம் என்றிருந்த நம்மிலும் பேதையர்கள் மற்றுளரோ என்று வகுத்துரைப்பார்”

ஆயினர். அதுகேட்ட வேறுசிலர், அவரை மறுத்து, சம்பந்தப்பெருந்தகை இரக்கம் மிகவுடையர் என்று சாதிப்பாராய், மருகல் விட்ம் தீர்த்த செய்தியை எடுத்து, -