பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/189

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


188 இ. ஒளவை சு. துரைசாமி

என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவருட் சிலர், இவ்வுணர்வு வேதகாலத்துக்கு முற்பட்ட தென்றும் புத்த சமண சமயங்கள் நாட்டில் பரவத் தொடங்கிய பின்பே, இவ்வுணர்வு மிகுதியும் பயில்வ தாயிற்றென்றும் மொழிகின்றனர். நம்தண்டமிழ் நாட்டிலும், தொல்காப்பியம் முதல் தேவாரம் தோன்றிய காலம்வரையில், வினையுணர்வு மிக்க பயிற்சியின்றி யிருந்தது. ஞானசம்பந்தர் காலத்திற் றான் அஃதாவது இன்றைக்குச் சற்றேறக்குறைய 130 ஆண்டுகட்டுமுன்பு தான், வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வினையுணர்வையே அடிப்படை யாகக் கொண்டு எழுந்தவையாதலின், அவற்றின் தொடர்புடைய நூல்களை விடுத்து, ஏனையவற்றை நோக்கின், அவை தொல்காப்பியமும் சங்க விலக்கியங்களும் எனக் காணப்படும்.

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பாகுபாட்டதாகும். இதன்கண், எழுத்ததிகாரம், எழுத்தும். அது சொல்லின் கண் இடம்பெற்றுத் தொடர்புவுறுதலும் கூறுவது; அதனால், அதன்பால் வினையியல்பு கூறும் பான்மை இன்றாம். சொல்லதிகாரம் வினை யியல்பைக் கூறுகிறது. இது, பொருளின் புடை பெயர்ச்சியாகவும் வினையென்றுகூட்டி, “வினை யெனப்படுவது வேற்றுமை கொள்ளாது, நினையுங் காலைக் காலமொடு தோன்றும்”, “காலந்தாமே முன்றெனமொழிப” என்பனவாய நூற்பாக்களால்