பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/253

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


252 ஒளவை சு. துரைசாமி

முறைமைக்கண் தங்குகின்ற தென்பார், இவை காக்கும் முறைமையால்” என்றார்.

வேள்வியால் தண்மழையும், மழையால் அருச்சனை வழிபாடும் நிலவுமென்பதும், எனவே வேள்வியும் அருச்சனையும் நிலைபெறுமாறு காத்தல் அரசுமுறையென்பதும், அம்முறையினைக் குறை வின்றிச் செய்யும் வேந்தன் வாழ்தல் வேண்டு மென்பதும் பிள்ளையார் உரைத்தருளிய மெய்ம் மொழியின் கருத்தாதல் அறிகின்றாம், மற்று, அசை நிலை. வேள்வியும் மழையும் காரணமும் காரியமு மாய் நின்று, அருச்சனையாகிய பயனை முடித் தமைதலின் “வேள்விநற்பயன் வீழ்புனலாவது” என்று எடுத்துரைத்தாரென வறிக. -

இனி, நிறுத்த முறையே, “ஆழ்க தீயது எல்லாம் அரன்நாமமே சூழ்க” என்ற பாசுரப் பகுதிகட்கு ஆசிரியர் பேருரை வகுத்தருளுகின்றார்.

“ஆழ்க தீயதென் றோதிற் றயல்நெறி வீழ்க வென்றது வேறெல்லா மரன்பெயர் சூழ்க வென்றது சொல்லுயிர் யாவையும் வாழியஞ் செழுத் தோதி வளர்கவே.” (3)

உரை - ஆழ்க தீயது ஒன்று ஒதிற்று - ஆழ்க தீயது எனப் பிள்ளையார் திருவாய் மலர்ந்தருளியது; அயல் நெறி வீழ்க என்றது - சைவத்துக்கு அயலதாகிய தீநெறி வீழ்க என்பது குறித்து நின்றது; வேறு எல்லாம் - அதனின் வேறாகிய நெறிக்கண்