பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 255

“வெஞ்சொல் தஞ்சொல்லாக்கிநின்ற வேடமிலாச் சமனும்” (நெடுங்களம், 10) என்றும், “பறிகொள் தலையினார் அறிவதறிகிலார்” (வீழி. மிழலை.10) என்றும் ஒதுதலின், அவர் மேற்கொண்டொழுகிய நெறியினைப் பிள்ளையார், “தீயது” என்றாரென்றலு மொன்று.

இனி, எல்லாம் எனப் பிள்ளையார் அருளிய திருமொழிக்குப் பொருள் கூறுவார் ஆசிரியர், “வேறெல்லாம்” என்று உரைக்கின்றார். எல்லாம் என்றது. சமண் சமயமொழிந்த ஏனையெல்லாச் சமயங்களையும் எஞ்சாமல் தழுவி நிற்பது பெறப் படும். அவற்றைப் பிற எல்லாம் என்னாது வேறெல் லாம் என்று சிறப்பித்ததனால், சமண்சமயத்தின் வேறாய், சைவத்திற் பிறவாய் நிற்கும் பல்வகைச் சமயங்களும் குறித்தவாறு உணரப்படும். சைவத்தைப் போல் வேதநெறியைத் தழுவி நெறியினும் முடிபிலும் வேறுபடும் பிறசமயங்கள், வேதநெறியினை அறவே மேற்கொள்ளாத சமண்சமயத்திற்கு வேறாதலின், இவ்வாறு தெரித்தோதல் வேண்டிற்று. எவ்வாற் றானும் இயைபில்லதனையே வேறு என்ற சொல்லாற் சுட்டவேண்டுமென்பது ஆசிரியர்க்குக் கருத்தாதல், அப்பூதியடிகள் தாம் நிறுவிய தண்ணிர்ப் பந்தர் முதலியவற்றிற்கு இட்ட பெயரைக் கண்டு நாவரசர், நும் பேர் எழுதாதே, வேறொருபேர் முன்னெழுத வேண்டிய காரணம் என்கொல்” என்றார்க்கு, வேறு என்ற சொல்லாற்றலால் மிக