பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இத் 269

நினைந்து அவனுடைய காலில் வீழ்ந்து வணங்கு வதும், அவன் மனம் மருண்டு, “அடியேன் அடி வண்ணான் என்று அஞ்சி நடுங்கி நின்றபோது, ‘அடியேன் அடிச்சேரன்” என்று மொழிந்து, ‘திருநீற்று வார வேடம் நினைப்பித்தீர்’ என்று அவனை இனிது செல்ல விடுத்தலும், இவர்க்குச் சிவ பரம்பொருளின் மேல் இருந்த உண்மையன்பினை, அடியார் வழிபாட்டால் தெரிய விளக்குகின்றன. திருநீற்று வார வேடத்தில் இவர்க்கு இருக்கும் பேரன்பினை, அத்திருவந்தாதியில்,

“வருகின்ற மூப்பொடு தீப்பிணிக் கூற்றம் வைகற்கு

வைகல்: பொருகின்ற போர்க்கொன்றும் ஆற்ற கில்லேன்;

பொடியூசிவந்துன் அருகொன்றி நிற்க அருளுகண்டாய், அழல்வாய் அரவம் வெருகொன்ற வெண்மதி செஞ்சடை மேல்வைத்த

வேதியனே” (21)

என்று குறிக்கின்றார்.

இவர் அரசு கட்டிலேறி அரசுபுரிந்து வருங்கால், இவர் மனம் சிவ வழிபாட்டில் சிறிதும் திரியவே இல்லை. தாம் தம்மனம், சொல், செய்கை என்ற மூன்றையும் சிவ வழிபாட்டில் ஒன்றுவித்து, நாளும் சிவபெருமான் திருவடிச் சிலம்போசை தமது சிவ பூசைக்கண் தம் திருச்செவியாரக் கேட்டுச் சிறந்து வருகின்றார். இவர் எண்ணமெல்லாம் சிவபெருமான் திருவடியிலேயே ஒன்றி நிற்கின்றன. இவற்றைச்