பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/276

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் இ. 275

பாடுமிடத்துச் சிறிது சோர்வு தோன்றுகிறது. அப்போது, அவர்,

“மானிலத் தோர்கட்குத் தேவ ரனையஅத் தேவரெலாம் ஆனலத் தால்தொழும் அஞ்சடை யிச னவன்பெருமை தேனலர்த் தாமரை யோன்திரு மாலவர் தேர்ந்துணரார்; பாநலத் தால்கவி யாம்.எங்ஙனே இனிப் பாடுவதே” (89)

என்று பாடுகின்றார்.

அவர் தம் கருவி கரணங்களைத் தொண்டில் ஈடுபடுத்தும் திறம் நம்மனோரை அத்தொண்டில் ஈடுபடச் செய்யும் அறவுரையாக இருக்கிறது. .

“சிந்தனை செய்ய மனம்அமைத் தேன்செப்ப -

நாவமைத்தேன், வந்தனை செய்யத் தலையமைத் தேன்தொழக்

கையமைத்தேன் பந்தனை செய்வதற் கன்பமைத் தேன்மெய்

- யரும்பவைத்தேன் வெந்தவெண் ணிறணி யீசற் கிவையான் விதித்தனவே”

(93)

இவ்வகையில் நம்மை நோக்கி,

“கூறுமின் ஈசனைச் செய்ம்மின்குற் றேவல்

குளிர்மின்கண்கள் தேறுமின் சித்தம் தெளிமின் சிவனைச் செறுமின்

செற்றம்