பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 281

உள்ளம் சிறந்த இவர், திருவாரூர் சென்று நம்பி யாரூரரைக் கண்டு அவர் நட்புற்று உள்ளம் சிறக்கின்றார்.

சேரமான் திருவாரூரையடைந்து நம்பி யாரூரைக் கண்டபோது, ஆராக் காதலுற்ற அவர் அடித்தாமரையில் முதற்கண் வீழ்ந்து வணங்கு கின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான் “சந்த விரைத்தார் வன்றொண்டர் முன்பு விருப்பினுடன் தாழ்ந்தார்” என்றும், “முன்பு பணிந்த பெருமானைத் தாமும் பணிந்து” வரவேற்றனர் என்றும் கூறுகின்றார். இவர் இருவர்க்கும் உண்டான நட்பின் நலத்தை சேக்கிழார் பெருமான் நிரம்ப எடுத்து இயம்பு கின்றார். இருவரும் ஒருவரையொருவர் பணிந்து தழுவிக்கொள்ளும் செயலை,

“முன்புபணிந்த பெருமாளைத் தாமும் பணிந்து

- முகந்தெடுத்தே அன்புபெருகத் தழுவவிரைந்து அவரும் ஆர்வத்

- தொடுதழுவ இன்பவெள்ளத் திடைநின்றும் ஏற மாட்டா

- தலைவன்போல் என்பும்.உருக உயிரொன்றி உடம்பு மொன்றாம்

. - எனஇசைந்தார்” என்றும், “ஒருவர் ஒருவரிற் கலந்த உணர்வால் இன்ப மொழியுரைத்து மகிழ்ந்தார் என்றும் கூறுகின்றார். இவ்வாறே பின்பு நம்பியாரூரர் இறுதியில் சேர நாட்டிற்குச் சென்று சேரமானைக் கண்டபோதும்,