பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/340

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் இ 339

ஆளவந்தான் என்னும் தானைத்தலைவன் போர்ப் புண்பட்டு மாய்ந்தான். குலசேகரன் உள்ளத்தில் அசைவு பிறந்தது. இலங்காபுரித் தண்டநாயனுக்குப் பாண்டியநாட்டில் இடமும் வலியும் கிடைத்தன; எண்ணியவாறு போர்ப்புகமும் எய்துவதாயிற்று.

“பராக்கிரமனைத் தொலைக்கப் புகுந்து பராக்கிரமபாகுவின் பகையுண்டாக்கிக் கொண் டோம்; இனி இதனைக் கூடாதொழியின், பாண்டியர் குடியால் தமிழ்நாட்டிற்குட் பிற நாட்டினர் புகுந்து அரசு நிறுவினர் என்ற பெரும் பழியுண்டாமே” எனக் குலசேகரன் நினைத்தான். நாட்டில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த பராக்கிரமனுடைய தானைமறவர் களைத் தேடித் திரட்டினான். அந்நாளில் கொங்கு நாட்டில் குலசேகரனுக்கு மாமன் ஒருவன் ஆட்சி செய்து கொண்டிருந்தமையின் அவனுடைய படை களையும் சேர்த்தான். பாண்டிப்படையும் கொங்கப் படையும் சேர்ந்துவரத் தானே அப்படையை முன்னின்று நடத்தி இலங்காபுரித் தண்டநாயக னுடன் போர் தொடுத்தான்.

பராக்கிரமன் படைமறவர் உள்ளன்போடு போர் செய்யவில்லை; கொங்கப்படை அத்துணைப் படைப்பயிற்சியின்றியிருந்தது. படையினது தொகை பெருகியிருந்ததேயன்றி வலி பெருகவில்லை. ஈழப் படையில் கிளர்ச்சியும் மறமும் படை தொடுப்பும் கண்டவளவிலேயே குலசேகரன் படை வலிதளர்ந்து சிதையலுற்றது. பராக்கிரமனுடைய படைமறவருட்