பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


90 ஒளவை சு. துரைசாமி

கண்ணாகிய பொறி வாயிலாகச் சிவபரம் பொருளைத் திருப்பாசூரில் “வேலை சூழ்ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்புமாகி ஏபலகம் தொழுதேத்திக் காண நின்ற கண்ணாகி மணியாகிக் காட்சியாகிக் காதலித்தங் கடியார்கள் காண நின்ற பண்ணாகி இன்னமுதாம் பாசூர்மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தவாறே எனவும், திருநாரையூரில் “அடியேற்கு நினைதோறும் அண்ணிக்கின்ற நாவானை நாவினில் நல்லுரைய னானை நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே”, எனவும் உரைக்கின்றார்.

திருவாய்மூரில், “பரிந்தார்க்கருளும் பரிசும் கண்டேன். பாராகிப் புனலாகி நிற்கை கண்டேன். விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன், மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே” எனக் கண்ட காட்சியை விரித்துக் கூறுகின்றார். அவர் திருப்பூந் துருத்தியில் “நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை கல்லாதன வெல்லாம் கற்பித்தானைக் காணாதன வெல்லாம் சொல்லி யென்னைத் தொடர்ந்து இங்கு அடியேனை ஆளாக்கொண்டு பொல்லாவென் நோய் தீர்த்த புனிதன் தன்னைப் புண்ணியனைப் பூந்துருத்தி கண்டேன் நானே’ எனவும் இசைக் கின்றார்.

இவ்வாறு பலவகையிலும் பரமனைக் கண்டு மகிழ்ந்த நாவரசர்க்கு ஆராமை மீதுர்கிறது. வேறு